Skip to main content

Posts

Showing posts from September, 2016

Article Writing Contest For Nurses organised by Doctors Association for Social Equality (DASE)

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு DASE எனப்படும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் என்ரும் குரல் கொடுத்து வருகிறது. இந்த சமுதாயத்தில் செவிலியர்களின் இன்னல்களுக்கு குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களின் கலை இலக்கிய திறமைகளையும் ஊக்குவிக்கும் விதமாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் செவிலியர்களை கட்டுரை எழுத கோரியுள்ளது. மாநாட்டு வரவேற்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

N S Grade - II Transfer and Posting Order (Transfer Counselling Conducted on 21-09-2016) issued by DMS

தமிழக சுகாதார துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 க்கு 21-09-2016 அன்று நடைபெற்ற கலந்தாய்விற்கான DMS அவர்களின் பணி மாறுதல் ஆணை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. செவிலியர் கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. Please Click Here to Download Transfer & Posting Order Issued

Contract Basis to Regular Nurse Posting Name List sent by DMS

தமிழக சுகாதார துறையில் உள்ள ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும், அதற்காக ஒவ்வொரு செவிலியரும் குரல் கொடுக்க வேண்டும்.  ஆனால் நமக்கு தோன்றுவதெல்லாம் ஒப்பந்த செவிலியர்கள் வேறு, நிரந்தர செவிலியர்கள் வேறு. இந்நிலை மாற உறுதி எடுப்போம் ! தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய தகுதி வாய்ந்த ஒப்பந்த செவிலியர்களின் பட்டியலை உயர்திரு. இயக்குநர் அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார். ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download CB to Regular Name List  

Contract Nurse to Regular Nurse Date of Counselling intimated by DMS

தமிழக சுகாதார துறையில் வேறு எந்த பணியாளருக்கும் இல்லாத ஒப்பந்த முறை செவிலியர்களுக்கு மட்டும் உள்ளது. ஒப்பந்த முறையால் செவிலியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை, தொழில் மரியாதை இல்லை. அனைத்து தொழில்துறையினருக்கும் மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, செவிலியர்களுக்கு பரபட்சம் காட்டுவதும், செவிலியர் நலனுக்காய் போராட வேண்டிய சங்கங்கள் இதில் அரசியல் பிழைப்பு நடத்துவதும் பெரும் வருத்தமே. அரசும் இதில் பல்வேறு சூது வேலைகளை செய்து வருகிறது. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக  முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் பணி மூப்பு அடிப்படையில்   1500  ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் அறிவித்தும் கூட ”சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்” என்பது போல அரசு அதிகாரிகள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து செவிலியர்களின் வாழ்வினை நாசம் செய்தனர். அரசாணை என்ற பெயரில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை ஒன்றாக்கி ஒரு அரசாணையாக கொடுத்தது வரலாற்று தில்லாலங்கடி வேலை. தற்போது சொற்பமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கல

Staff Nurse to Nursing Superintendent Grade II Panel Name List Sent by DMS

தமிழக சுகாதார துறையில் செவிலியர்களின் பணி மூப்பு அடிப்படையில் 30 வருடங்களுக்கு பிறகு அளிக்கப்படும் செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கான தகுதிவாய்ந்த செவிலியர்களில் வரும் 23-09-2016 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள நபர்களின் பெயர்பட்டிய உயர்திரு இயக்குநர் அவர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக அப்படியல் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.  Please Click Here to Download Name List

Nursing Superintendent Grade II Transfer Counselling Date and Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counselling Date announced be the Director,

Staff Nurse to Nursing Superintendent Grade 2 Second Panel list

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 30 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் பதவி உயர்விற்கான 2வது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 இயக்குநர் கடிதம் 2 தகுதி வாய்ந்த செவிலியர்களின் பெயர் பட்டியல்.

Tamil Nade Govt Bio Medical Waste Government Order

அரசு மருத்துவமனைகளில் உருவாகும் BIO MEDICAL WASTE தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். Govt Order's 5th Page for Nurses Use Please Click Here to Download the Govt Order.  

MRB Nurses Eligible for maternity leave A Doctor Case judgement copy

MRB மூலம் பணியில் இணைந்த செவிலியர்கள் மகப்பேறு விடுப்பு முழு ஊதியத்துடன் பெறலாம். மருத்துவர் தொடுத்த வழக்கின் நகல் Dr.J.Bhavani_vs_The_Dean_on_1_June,_2016.PDF.