அரசு மருத்துவமனைகளில் அரசுப்பணி சுகாதார பணியாளர்கள் குறைவு . தனியார் நிறுவனம் ஒன்று புற ஆதார அடிப்படையில் பணி செய்கின்றது . அந்த நிறுவனத்தின் கீழ் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணியாளர்கள் ,கண்காணிப்பாளர்கள் , மேலாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்அ, வர்கள் 3 ஷிப்டாக பணியில் உள்ளனர், புற ஆதார ஊழியர்களின் வருகை பதிவேட்டை பராமரிப்பதும் அவர்களே, கழிவறை ,வார்டை சுத்தம் செய்வது மட்டுமே எங்கள் வேலை மற்ற வேலைகள் செய்ய மாட்டோம் . என்கிறார்கள் . ஒரு வார்டு என்று எடுத்து கொண்டால் குறைந்தது 20 நோயாளிகள் இருப்பர் . சில விதிவிலக்குகள் உண்டு 50 க்கும் மேல் இருப்பர் . ஒரு நோயாளி அனுமதிக்க பட்ட உடன் அவருக்கு ரத்தப்பரிசோதனை , X - Ray, ஸ்கேன் சிறப்பு மருத்துவர்களின் கருத்துரு, மயக்க மருத்துவரின் ஒப்புதல், என பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். மருத்துவமனை பணியாளரோ 6 வார்டிற்கும் சேர்த்து ஒருவர் இருப்பார் . அவர் எப்படி 100 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்து செல்ல முடியும் . பரிசோதனைகள் முடிக்கவில்லை என்றால் செ