Skip to main content

Posts

Showing posts from August, 2010

செவிலியர் உறுதிமொழி

“ நான் இந்த அவையில் இறைவன் முன்னிலையில் எனது வாழ்க்கையை தூய்மையாகவும் எனது தொழிலை அர்ப்பணிப்புடனும் நடத்தி செயல்படுவேன் என உறுதி எடுக்கிறேன் எனக்கோ எனது செவிலிய பெயருக்கோ களங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களில் இருந்தும் நான் விலகி இருப்பேன் பிணியாலர்களுக்கு எந்தவிதமான கெடுதலையும் விளைவிக்க கூடிய மருந்தினை கொடுக்கவோ அல்லது நான் எடுக்கவோ மாட்டேன் எனது சக்திக்கு உட்பட்டு எனது செவிலிய பணியின் தரத்தை நிலைக்க செய்யவும் அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நான் பாடுபடுவேன் நான் பணியில் இருக்கும் பொழுது எனக்கு தெரிய வருகிற பிணியாலர்களின் தனிப்பட்ட  மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட செய்தியின் இரகசியத்தை காப்பேன் எனது முழு மனதுடன் மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக இருப்பதுடன் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிணியாலரின் நலனுக்காக நான் பாடுபடுவேன் ”              -- இது ஹிப்போகிரேட்சினால் உருவாக்கப்பட்டது              -- திருமதி லிஸ்ட்ரா ஹிரிட்டர் மற்றும் குழுவால் வடிவமைக்கப்பட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

மருத்துவ கல்வி இயக்ககம்

“மனிதவள மேம்பாட்டையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது தமிழக அரசின் (Tamilnadu Government) முக்கிய குறிக்கோளாகும்,” இவை மக்களின் மனநலம், உடல்நலம் பொறுத்தே அமைகிறது, இதற்கு சுகாதார முன்னேற்றம் அடிப்படையாக விளங்குகிறது, சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களை உருவாக்குவதில் மருத்துவக் கல்வி துறை முக்கிய பங்காற்றுகிறது மருத்துவ சேவைகள் இயக்ககத்தில் (Directorate of Medical Services) இருந்து மருத்துவ கல்வி இயக்ககம்(Directorate of Medical Education) 1966 ஆண்டு தனிமை படுத்தப்பட்டு கடந்த 44 வருடங்களாக இயங்கி வருகிறது இதன் கீழ் மருத்துவ கல்லூரிகளும், கற்பித்தல் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன மருத்துவ கல்வி இயக்குனகரம்(Directorate of Medical Education), கல்லூரிகளிலும்,பிணியாளர் கவனிப்பிலும், கல்வி வளர்ச்சி, பயிற்சி உதவி,மற்றும் ஆராய்ச்சி அடிப்படை அமைக்க பொறுப்பு உடையது மருத்துவ கல்வி இயக்குனகரகத்தின் பணிகள் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியம் (Nursing), மற்றும் மருத்துவம் சார்ந்த கல்விகளின், கல்வி முறையை கண்காணிப்பது, மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் க

செவிலியர்கள் பற்றி அன்னை இந்திரகாந்தி அவர்கள்

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் - டெல்லியில் (AIIMS-Delhi), முன்னாள் பிரதமர் அன்னை இந்திரகாந்தி அவர்கள் செவிலியர்கள் பற்றி ஆற்றிய உரை தமிழில் :              “ஒரு செவிலியர் மருத்துவருக்கு உதவியாளர் அல்லது உதவி பொருள் மட்டுமே அல்ல, அவள் மருத்துவரின் அவசிய உதவி இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள்ளன, மேலை நாடுகளில் செவிலிய மயக்குனர் முழுமையாக பயிற்சி பெற்று சிறிய அறுவைசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து கொடுக்கின்றனர், பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கின்றனர் ஒரு செவிலியருக்கு மருத்துவ குழுவில் தனித்தன்மை மிகுந்த உரிமை உள்ளது ஆங்கிலத்தில் “A nurse is not merely an aid and assistant to a doctor, she has an independent part to play in many areas where a doctor need not necessarily be present. In the western world, a nurse anesthetist is properly trained,takes on important duties in minor surgical procedures and also takes care of newborns, among others. The nurse is in her own right a key member of the medical team”

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இணையதளம்

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இணையதளம் https://tnhealth.tn.gov.in/ (Formerly  http://www.tnhealth.org/ ) ஆகும் இந்த இணையதளம் மருத்துவத்துறையின் அனைத்து தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுகிறது "தமிழக அரசு ஆரோக்கியமான மக்களை உருவாக்க ஈடுபாடு கொண்டுள்ளது அனைத்து மக்களின் வீட்டின் வயிற்படியிலே தரம் உயர்ந்த மருத்துவ சேவை அளிக்கவும் தமிழகத்தின் எந்த ஒரு முலையிலும் அதனை கிடைக்க செய்யவும் அரசு பாடுபடுகிறது அதே நேரத்தில் விரைவில் வளரும் இந்த நவீன மருத்துவ துறையில் உயர்ந்த தொழில்நுட்ப மருத்துவ சேவை அனைத்து தரப்பினர்க்கும் எவ்வித பாரபட்சமின்றி கிடைக்க வழிவகை செய்யும் " என்பது தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்தின் வரவேற்பு செய்தி ஆகும் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளம் தரும் வசதிகள் தமிழ்நாடு அரசு சுகாதார துறையின் பணிபடி வரைவு முறை அட்டவணை அனைத்து இயக்குனகரங்களின் இணையதள வழி சுகாதார துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கும் இணைய தள நிர்வாகிக்கும் மின் அஞ்சல் செய்யும் வசதி இணையதள வரைபடம் (இந்த வழி வேலை செய்யவில்லை) கருத்துக்களுக்கான இணைப்