Skip to main content

Posts

Showing posts from June, 2011

செவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II ற்கு இணைப்பு செய்த இயக்குனரக கடிதம் மற்றும் விளக்கம்:

தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 லிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 ற்கு பதவி இணைப்பு (Merge) செய்து அரசு ஆணை வெளியிட்டு இருந்தது ஆனால் துறை வாரியான விளக்கம் மற்றும் அனுமதி வராமல் பல்வேறு இடங்களில் இன்னும் செவிலிய கண்காணிப்பாளர் 3 என்ற பதவி பயன்பாட்டில் இருந்தது வந்தது இதனை தெளிவுறுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்கள் வெளியிட்ட விதிமுறைகள் அடங்கிய கடிதம் இங்கு அரசு மருத்துவ துறை செவிலிய கண்காணிப்பாளர்களின் தகவல் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது செவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து, செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II ற்கு இணைப்பு செய்து இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை கடிதம்:  கடிதத்தை தரவிறக்கம் (Download)  செய்ய இங்கு கிளிக் செய்யவும்

ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் மீண்டும் பணி நியமனம் வழங்க வகுக்கப்பட்ட விதிகள்:

அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள், பணி பெற தவறினாலோ, பணி பெற்ற பிறகு தன்னிச்சையாக பணியில் இருந்து நின்றாலோ கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாக அரசு வெளியிட்ட ஆணை இங்கு உங்களுக்காக பதியப்பட்டு உள்ளது அரசாணையை PDF கோப்பாக தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அனுபவிப்பதற்கான அரசாணை

தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து அரசு மகளிர் ஊழியர்களும் ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அனுபவிக்கலாம் என்று அரசு கூறியிருந்தது, அதனை நிறைவேற்றும் விதமாக அரசு வெளியிட்ட அரசாணை இங்கு வெளியிடப்படுகிறது, படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்   அரசாணையை தரவிறக்கம் ( DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

செவிலியர் பட்ட படிப்பு (Post BSc Nsg) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

செவிலிய பட்டய படிப்பு முடித்து அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்  செவிலியராக பணிபுரிந்த செவிலியர்கள் பட்ட படிப்பு பயில விண்ணப்பங்கள் விநியோகிக்கப் படுகின்றன அதன் தகவலை கீழே காணலாம் 2011-2012 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த சுயநிதி கல்லூரிகளுக்கு ஒற்றை சாளர முறையில்  இரண்டு ஆண்டு BSc Nursing பட்ட படிப்பு (செவிலியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாகவே பெறப்பட முடியும், தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது  கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டது இணையதளத்தில் விண்ணப்பங்கள் 06.06.2011முதல்   16.06.2011 வரை தரவிறக்கம் (Download)  செய்ய கிடைக்கும் விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 16.06.2011 மாலை 5.00 மணி வரை விண்ணப்பத்தை  தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும் மேலும் விபரங்களுக்கு Tnhealth.org பார்க்க Tags: Tamilnadu Trained Nurses Post BSc Nursing Application, Tamilnadu Nursing Council, Post BSc Nursing Application, Post BSc