தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சுகாதார வசதிஇல்லாத கிராமங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன்அடிப்படையில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த, மாண்புமிகுதமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி திருச்சி சுகாதார மாவட்டம், மணச்சநல்லூர் வட்டாரத்திலுள்ள சமயபுரம்; வேலூர்சுகாதார மாவட்டம், வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டம், வாலாஜா வட்டாரத்தில் உள்ளசுமைதாங்கி; கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள பேஜிபள்ளி; கள்ளக்குறிச்சிசுகாதார மாவட்டம், திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாடு; சின்ன சேலம் வட்டாரத்திலுள்ளஅம்மாகளத்தூர்; நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள மதிரவேலூர்; திருப்பூர் சுகாதார மாவட்டம், பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி; பெரம்பலூர் சுகாதார மாவட்டம்,பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள எளம்பலூர்; ஈரோடு சுகாதார மாவட்டம், பெருந்துறை வட்டாரத்திலுள்ளகாஞ்சிக்கோயில்; நம்பியூர் வட்டாரத்திலுள்ள மளையம்பாளையம்; திருப்பத்தூர் சுகாதார மாவட்டம்,கந்திலி வட்டாரத்த