பொதுவாக அவரவர் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டும், ஆனால் சுகாதார துறையில் அனைத்து தர்ப்பினரின் பிரச்சனையை ஒப்பந்த செவிலியர்கள் தீர்க்க வேண்டி உள்ளது. டாக்டர் ஊசி போடலயா ஒப்பந்த நர்ச போஸ்டிங் போடு, பார்மசிஸ்ட் மாத்திரை தரலையா ஒப்பந்த நர்ச போஸ்டிங் போடு, லேப் டெக்னீசீயன் டெஸ்ட் பண்ணலயா ஒப்பந்த நர்ச போஸ்டிங் போடு. ஆனால் இவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய செவிலியர்களுக்கு பிரச்சனையா அதையும் ஒப்பந்த செவிலியர்கள் தீர்க்க வேண்டி உள்ளது. செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்வா ஒப்பந்த செவிலியர் போராட்டம் நடத்தினால் தான் நடக்கும். செவிலிய கண்காணிப்பாளர் பணி இட மாறுதலா ஒப்பந்த செவிலியர் போராட்டம் நடத்தினால் தான் நடக்கும். இப்போது நிரந்தர செவிலியர் பணி இட மாறுதலும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தால் நடக்கிறது என்பதை மறுக்க இயலாது. இதையும் நான் தான் செய்தேன் என பிரச்சாரம் செய்ய சில பிரச்சார பீரங்கிகள், புகைப்பட புழுக்கள் அலைகிறார்கள். நிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி இட மாறுதல் 03 - 02- 2016 இடம்: DMS அலுவலகம் வரும் திங்கள் (03/02/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பொது பணி இ