மாற்றம்

திரு. பூமிநாதன், தலைவர், அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெறும் செவிலியர்கள் சங்கம். அவர்களின் கட்டுரை.

இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா மற்றும் ஒரு சில நாடுகளில் கூட செவிலியர்களின் பணி மேல் உள்ள புரிதல் தன்மை தரம் குறைந்து கொண்டே போவதற்கு காரணம் என்ன?

என்னவென்றால்,

அவர்களின் பிரச்சனையை, மருத்துவ துறையில் உயர்மட்டத்தில் இருந்து வரும், மருத்துவர்களிடம் கொண்டு செல்வது தான் முழுக் காரணம்.

மருத்துவர்கள், மருத்துவத் துறை முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதற்கு பதில் ஒரே வரியில் சொல்லலாம்.

மருத்துவத்துறை என்று இருந்ததை, பாரா மெடிக்கல், Allied Health Science,மற்றும் பல பிரிவுகளை உருவாக்கி விட்டார்கள். சரி உருவாக்கி விட்டார்கள் ஏன்? இன்னும் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும்?

காரணம் இதுதான்

அதற்கு முன்னால், இன்று பணி நிரந்தரம் தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது யாரோடு பேசுகீறார்கள் என்று பார்த்தால், DME, DMS மற்றும் இயக்குநர்கள் அனைவரும் MBBS படித்தவர்கள், இவர்கள் உடன் தான் பேச்சு வார்த்தை நடக்கிறது.ஒருத்தராவது Higher officer posting ல் nursing படித்தவர்கள் அமர்ந்து இருக்கிறார்களா? என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்வேன்.

இதே நிலைமை தான் physio, பார்மஸிட் , லேப் டெக்னீசியன் மற்றும் பல மருத்துவதுறை ஊழியர்களின் நிலைமை.

நான் எண்ணுகிறேன் இந்த MBBS படித்தவர்களுக்கு ஏன் இந்த மனநிலை ? அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் JD, DD, CMO, போன்றவர்களிடம் கீழ்    நிலையில் உள்ளவர்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் நிலைமை தான் இன்னும் தொடர்கிறது.

இவர்கள் தான் சம்பளம், கல்வி, ஊதிய உயர்வு, பணி உயர்வு, மற்றும் பலவற்றுக்கும் அரசு ஆணையாக மாற்றுவதில் இவர்கள் கருத்து தான் முதன்மை.

எந்த காலத்திலும் சம்பள விகிதத்தில் செவிலியர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஊதியத்தை உயர்த்த முன்வரமாட்டார்கள், ஊதியத்தை உயர்த்தினால் இவர்கள் மடிதான் அடி வாங்கும் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்கள்.

இன்று MBBS படித்தவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்று யாரெனும் ஒத்துக் கொள்வார்களா? என்றால் இல்லை

ஒவ்வொரு துறையிலும் படித்தவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அதே போல் இந்த MBBS படித்தவருக்கும் தன் குடும்பத்தை காக்க சம்பளத்திற்கு உழைத்து, பிறகு திருமணம், குழந்தை வந்த பிறகு தனியாக மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பதுதானே, அங்குதான் பிரச்சனை வருகிறது, மருத்துவமனை தொடங்கினால் பணியளார்கள் வேண்டும், அவர்களுக்கு அதிகப்படியான ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான், கீழ் உள்ள துறையைச் சார்ந்தவர்களை இன்னும் தனக்கு கீழே வைத்துக் கொள்ள விரும்புகிறான். அதிலும் செவிலியர்கள் தேவையை உணர்ந்து தான் இவ்வாறு செய்கிறார்கள். ஏனெனில் அரசு மருத்துவரும், தனியார் மருத்துவரும் பலமான கூட்டணி இருக்கிறது.

இன்னும் ஒரு கேள்வி கேட்பார் மருத்துவர்,ஏன்? நாங்கள் பாரா மெடிக்கல் பிரிவினருக்கு நல்லது செய்யவில்லையா? செய்திருக்கிறார்கள்! யார் செய்தார்கள், செய்வார்கள் என்று பார்த்தால், புதிதாக மருத்துவ துறையில் ஒரு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பையோ அல்லது புதிய கல்வி முறையை கொண்டு வர முயற்சி செய்பவர்கள் தான், செய்வார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.

இந்த முயற்சியை மேற்கொள்ளும் மருத்துவர் யாராக இருப்பார்?

இன்றைக்கு புதிதாக ஒரு  விஞ்ஞானத்தை அல்லது ஒரு நோயை கண்டுபிடிப்பது என்பது அல்ல அறிவியல். உதாரணத்துக்கு மின்சாரம், தொலைபேசி, கம்யூட்டர் செல்போன், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் எய்ட்ஸ், சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல், காலரா, கேன்சர், காசநோய், இரத்த அழுத்தம் இப்போது ஜிகா வைரஸ், போன்றவைகள் கண்டுபிடித்து சொன்னது அல்ல அறிவியல், இவையெல்லாம் பூமி எப்பொழுது தோன்றியதோ, அப்பொழுதே, இந்த உலகத்தில் உயிரோடு இருந்திருக்கிறது. நாம் அறியாமல் வாழ்ந்து இறந்து கொண்டே இருந்திருக்கிறோம்.எனவே நம்மால் அறியாமல், உணராமல் இருந்த நம்மின் அறியாமையை உலகத்திற்கு அறிமுகம் காட்டுவது தான் அறிவியலே ஒழிய புதிய கண்டுபிடிப்பு என்பது அறிவியல் கண்டுபிடிப்பு ஆகாது. இன்றும் இந்த பூமியில் அறியாத விஷயங்கள் பல இருந்து கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்கண்ட அறியாமையை அறிவியலை அறிமுகம் செய்து வைத்த , செய்து வைக்க முயற்சி மேற்கொள்ளும் மருத்துவர் எவர் ஒருவர் உயர்ந்த பதவியில் உட்காருகிறாரோ, அவரே தன் கீழ் உள்ள துறையை மாற்றும் முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பார். இப்படி பட்டவர்கள் அந்த பதவியில் இருந்ததின் விளைவே ஒரு சில நன்மைகள் கிட்டியது பாரா மெடிக்கல் துறையினருக்கு .

ஆனால் இன்றைக்கு அந்த பதவியில் இருப்பவர்கள், அறியாமை அறிவியலை அறிமுகம் செய்து வைத்தவர்களின் புத்தகத்தை படித்து MBBS ஆகி இருக்கிறீர்கள். இவர்கள் செய்வார்களா? இதை உங்களிடமே விட்டு விடுகிறேன்!

இவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீங்கள் MBBS படிக்கும் காலத்திலேயே நர்ஸ், பிசியோ, பார்மஸிட் , அனைத்து டெக்னீசியன் ,MNA ,FNA போன்ற பாடத்தையும் நீங்களே படித்து, அந்த துறையையும் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள் அதாவது  இவர் nursingdoctor, physio doctor, pharmacist doctor, lab technician doctor, mna doctor, fna doctor என்று படித்து, பணியையும் பெற்றுக் கொள்ளுங்கள். பிரச்சனை முழுமையாக விடை பெற்று விடும். பிறகென்ன நீங்களே ராஜா, நீங்களே மந்திரி

நீங்கள் மற்ற துறையினருக்கு செய்ய நினைத்தால் செய், இல்லையென்றால் அவர்களை, அவர்கள் வழியில் விட்டு விடு. நிச்சயம் காலம் மாறத்தான் செய்யும், அது உங்களுக்கும் தெரியும்

மாற்றம் என்பது வளர்ச்சிதானே....

2 Comments

  1. நெத்தியடி உண்மை

    சதீஷ்குமார் இ எஸ் ஐ மருத்துவமனை

    ReplyDelete
  2. Superb article, 100% true, but unity is strength. All nursing association should be united and fight. Hunger strike and have to bring media and executives council attention definitely will get solution. According to me, I feel there is no unity and strong association for nurses that is why these kind of problem arises. Should not differentiate in union regular and contract. All should get all facility on the first day itself. If you see any appointment recruit through TNPSC, on the day of appointment itself get all salary benefits, there is no such procedure like contract. Please do the needful to unite and fight for the good cause.

    ReplyDelete
Previous Post Next Post