தமிழ்நாடு அரசு சுகதரத் துறையில் செவிலியர்களுக்கென உள்ள சங்கம் பல்வேறு செவிலியர் விரோத நடவடிக்கைகளில் சாதித்து வருகிறது. செவிலியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று தரவேண்டிய தர ஊதிய நிகர அடிப்படை ஊதியமான ரூ .10610/- ஐ பெற்று தராமல் தன்னை அரசுக்கு என அமைக்கப்பட்ட சங்கமாக செயல்பட்டு "இஷ்டம் இருந்தால் வேலை செய் இல்லைனா எழுதி கொடுத்துட்டு வெளிய போ" என வீர வசனம் பேசி ஒரு மாபெரும் பேரணியை பொய்க்கச் செய்தது முதல் சாதனை. செவிலியர்களில் 10 வருடம் முடித்தாலும் செவிலியர் அவர் 20 வருடம் முடித்தாலும் செவிலியர் 30 வருடம் முடித்தாலும் செவிலியர் ஆக தான் பணி புரிந்து வருகின்றனர். பணி வருடத்திற்கு தகுந்த பதவி உயர்வு என்பது கனவாகவே உள்ளது செவிலியர்க்கு. (ஒரு இளநிலை உதவியாளர் [கிளார்க்] உடனடியாக உதவியாளர் பணியை பதவி உயர்வாக பெறும்போது செவிலியர்களுக்கு இதுபோல் இல்லாதது சாபக்கேடு) 30 வருடங்களுக்கு பிறகு கிடைத்த செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 3 பதவியையும் அரசுக்கு ஒப்படைத்து செவிலியர்களுக்கு மேலும் துரோகம் இழைத்துள்ளது ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க கோரி சங்