Skip to main content

Posts

Showing posts from July, 2012

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப மாதிரி

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பிலிருந்து 15 நாட்களை அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதற்கான ஊதியம் மற்றும் பிற படிகளை பெறலாம். இத்தகைய நடைமுறைக்கு அலுவலகத்தில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்  நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு முன்பு விண்ணப்பம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண் செய்ய அளிக்க வேண்டிய விண்ணப்ப மாதிரி ஒன்று இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். இங்கு கிளிக் செய்து ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் விண்ணப்ப மாதிரியை தரவிறக்கம் செய்யவும்

தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சரின் புதிய காப்பீட்டுத் திட்டம் படிவம், மற்றும் அரசாணை

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4,00,000 ரூபாய்க்கு காப்பீடு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள காலத்தில் பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மீண்டும் புதிய அட்டை வழங்கப்பட உள்ளது. அது வரை பழைய காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தலாம். இதுவரை காப்பீட்டு திட்ட அடையாள அட்டை (காப்பீட்டு அடையாள எண்) பெறாதவர்களும், புதிதாக பணியில் இணைந்தவர்களும் அளிக்க வேண்டிய விண்ணப்பம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெற பயண்படுத்த வேண்டிய படிவத்தை இங்கு கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும் . இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை, சிகிச்சை பெற முடிந்த நோய் பட்டியல் மற்றும் மருத்துவமனைகள் அடங்கிய அரசாணையை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நன்றி:-  WWW.TN.GOV.IN

செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 1 அலுவலர்கள் பயன்படுத்த வேண்டிய மருத்துவச் சான்று மாதிரி படிவம்

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை I பதவியில் உள்ளவர்கள் அரசிதழ் (GAZETTED OFFICER) பதவி ஆகும். அரசிதழ் பதவி வகிக்கும் செவிலியர்கள் மருத்துவ விடுப்பு கோரும் மருத்துவ சான்றிதழ் தனியானது அப்படிவம் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் இங்கு கிளிக் செய்து அரசிதழ் பதவி அலுவலரின் மருத்துவ சான்று விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 10.08.2012 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 10.08.2012 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் To know more details about this click here

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடனின் உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவியையும் ரூ.4 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிகரித்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பண கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியும், அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஏப்ரல் 30-ம் தேதி வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப