Skip to main content

Posts

Showing posts from 2013

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல் வெளியீடு

செய்திமடலுடன் இடமிருந்து, கதிர், உமாபதி, கலைச்செல்வி( வேலூர் மாவட்ட செயலாளர், ஒப்பந்த செவிலியர்கள் சங்கம்) அருண், கிருஷ்ணகுமார், கண்ணன் ஆகியோர். அரசு மருத்துவமனையின் முதுகெலும்பாய் உள்ள செவிலியர்களுக்கு, பயனுள்ள தகவல்களையும், நடப்பு நிகழ்வுகளை அளிக்க எடுக்கப்பட்டுள்ள ஒரு முயற்சி இந்த தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல், அச்சிடப்பட்ட செய்திமடலாய் வெளியிட எண்ணம் இருந்த போதிலும், பொருளாதாரம், அரசு பதிவு, அச்சு போன்ற காரணங்களால் இப்போது மின்னிதழாய் வெளியிட்டு உள்ளோம். செவிலிய துறை மற்ற தோழமை துறை நல்ல உள்ளங்களின் உதவியோடு விரைவில் மாத இதழாய் வெளியிடுவோம். நன்றிகளுடன் உமாபதி

PHC Posted Supervisory Nurses Training Schedule

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பயிற்சி பணிக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது அதற்கான அட்டவணை இங்கு தரப்பட்டுள்ளது செவிலியர்கள் தவறாமல் கலந்து கொள்ள ஏற்பாடு  செய்யுமாறு  மாவட்ட துணை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Nursing Superintendent Grade - I and Nursing Superintendent Grade - II Service particulars Called

தமிழக அரசு மருத்துவமனைகளில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்ட, வட்டம் சாராத மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்) பணிபுரியும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பொருட்டு அவர்களின் பணி பற்றிய கருத்துரு சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது 1. Please click here for Nursing Superintendent Grade - 1 Proposal Letter 2. Please click here for Nursing Superintendent Grade - 1 Proposed Panel List (Not Final List) 3. Please click here for Nursing Superintendent Grade - 2 Proposal Letter 4. Please click here for Nursing Superintendent Grade - 2 Proposed Panel List (Not Final List)

ஒப்பந்த அடிப்படை ஊதியத்திற்கான அரசாணை மற்றும் Software ல் கணக்கு தலைப்பு ஏற்றும் முறை

அரசு மருத்துவமனைகளில் CEmONC சென்டர்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கான ஊதியத்திற்கு புதிய கணக்கு தலைப்பில் ஊதியம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையை பெற இங்கு கிளிக் செய்யவும் அரசு மருத்துவமனைகளின் Payroll Software ல் இப்புதிய கணக்கு தலைப்பு ஏற்ற முடியாது அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள BUDSUB.DBF File ஐ  Payroll -->Master Folder க்குள்  Paste செய்ய வேண்டும்  BUDSUB FILE ஐ டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் ECS Pay Roll Software Download செய்ய

ஒப்பந்த அடிப்படை செவிலியரா?, அடிமை இனமா?.

தமிழகத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பல்வேறு திட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதனால் சுகாதார நிலைய கவனிப்பு பிரசவம் அதிகரித்து ( institutional delivery) உள்ளன. இரண்டு வருட ஒப்பந்த அடிப்படை பணிக்கு பிறகு நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவர் என்ற ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்பட்ட செவிலியர்கள், 5 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளனர். இப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்களை மட்டுமே பணியில் இருந்தால் போதும் என்றும் மற்ற செவிலியர்களை பணியிட மாறுதல் செய்து திட்ட இயக்குநர் ஆணையிட்டுள்ளார். "எனக்கு இட மாறுதல் இல்லை, நான் ஏன் கவலை பட வேண்டும்" என்ற எண்ணத்தில் மற்ற செவிலியர்களும். இது ஏதோ மற்ற துறையில் நடக்கும் ஒன்று என்பது போல செவிலியர் அமைப்பும் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதைவிட மேலாக ஊதிய உயர்வு, 12 மணி நேர பணிக்கு ரூ. 1000 என கூறி இப்போது அது பிரசவம் மற்றும் நோட்டு புத்தகங்களை பராமரித்தால் ( performance-based incentive) ம�ட்டுமே ரூ. 1000 உண்டு என திட்ட இயக்குநர் கூறியதாக கூறுகின்றனர். இது செவிலிய ப

செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (ஆக.12) முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

செவிலியர் பட்டயப் படிப்பு: ஆக.,12 முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (ஆக.12) முதல் விநியோகிக்கப்படவுள்ளன. தமிழகம் முழுவதும் 23 அரசு நர்சிங் கல்லூரிகளும் 200-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 68 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படவுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதி சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், விண்ணப்பக் கடிதத்துடன் விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். மற்ற பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200. செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்க அலுவலகம், கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து அதனுடன் விண்ணப்பக் கடிதத்தையும் இணைக்க வேண்டும். ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பட்டய செவிலிய பயிற்சி உள்ள அனைத்து இடங்களிலும் விண்ணப்பம் வழங்கபடும்.

AIIMS & JIPMER Staff Nurse Recruitment

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் செவிலியர் பணியிடங்களை நிரப்ப வின்னன்ப்பங்க்களை வரவேற்கின்றன எய்ம்ஸ் செவிலியர் பணியிடத்திற்கான தகவல்களை பெற இங்கு கிளிக் செய்யவும்  எய்ம்ஸ் செவிலியர் பணியிடத்திற்கான Advertisement பெற இங்கு கிளிக் செய்யவும்    ஜிப்மர்   செவிலியர் பணியிடத்திற்கான தகவல்களை பெற இங்கு கிளிக் செய்யவும்   ஜிப்மர் செவிலியர் பணியிடத்திற்கான Advertisement பெற இங்கு கிளிக் செய்யவும்      

Pay Grievance Redressal cell Recommendation for Health Department

தமிழக சுகாதார துறையில் உள்ள பணியாளர்களுக்கு தகுதிநிலை பதவி உயர்வு (10 வருடம் பணி) (Selection Grade) முடித்தவர்களுக்கு 3(3+3) சதவித ஊதிய உயர்வும். சிறப்பு நிலை பதவி உயர்வு (20 வருடம்) (Special Grade) முடித்தவர்களுக்கு 3 (3+3) சதவித ஊதிய உயர்வும் 1-04-2013 முதல் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்   மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் சிறப்பு படி  1-04-2013 முதல் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது மருத்துவமனை பணியாளர்களுக்கான சிறப்பு படிக்கான அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்  

REUPLOADING DOCUMENT PROCEDURES

சிலருக்கு APPOINTMENT ORDER, CERTIFICATE போன்றவற்றை மீண்டும் UPLOAD செய்ய சொல்லி SMS வந்துள்ளது அதற்கான வழிமுறைகள்  Is it possible to upload the documents, if it is failed in the first attempt? i. Yes. Go to  www.tamilnadunursingcouncil.com . ii. Click the Renewal of Registration & Licensure Card. iii. You will get the Instructions page. iv. Click next to go to Registration page. v. Click “Enroll with mobile number”. vi. Select the correct category of the Nursing education. vii. Enter the TNNC number. viii. Enter the same mobile number which you entered in the first attempt. ix. Confirm the mobile number. x. Click Submit. xi. You will receive an SMS with new verification code in the mobile number which you entered. xii. Enter the verification code and click submit. xiii. You will see the page showing all your details. xiv. Click Next to go to the Document upload page. xv. Select Yes option in the Document upload page. xvi. Browse and attach the documents which

Tamil Nadu Nurses Must Renew Their Certificates via Online

தமிழக செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் (Tamil Nadu Nurses & Midwives Council) ஜூன் - 2012 முன்பு செவிலியராக பதிவு செய்து உள்ளவர்கள் தங்களது பதிவினை ஜூலை - 2013 முதல் புதுப்பிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் அதற்கான வழிமுறைகள் இங்கு தரப்பட்டு உள்ளன. தமிழக செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் இதற்கான விளக்க வீடியோ படம் உள்ளது தமிழக செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்திற்கான வழி http://www.tamilnadunursingcouncil.com தங்களின் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் தங்களின் Registered Nurse Certificate ல் உள்ள எண்ணை குறித்து வைத்து கொள்ளவும் தங்களின் RN Number ஐ பதிவு செய்து SUBMIT பட்டனை அழுத்தவும் தங்களது பெயர் தோன்றும் அதில் I AGREE MY NAME & NUMBER IS CORRECT என்பதை TICK  MARK செய்து CONTINUE பட்டனை அழுத்தவும் அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்து 2 முறை பதிவு செய்து SUBMIT பட்டனை அழுத்தவும் தாங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு SMS வரும் அதில் ஒரு 6 இலக்க VERIFICATION NU

செவிலியர் தின வாழ்த்துக்கள் (2013)

அனைத்து செவிலியர்களுக்கும் உலக் செவிலியர் தின நல்வாழ்த்துக்கள் 2013 ஆம் வருடத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம், இந்நேரத்தில் செவிலியர்கள் ஒன்றுபட்டு அவர்களின் உரிமைகளை மீட்டு எடுக்க முற்பட்டோமா என்றால்? இல்லை எனலாம், இந்திய செவிலிய குழுமம் பல்வேறு செயல்களை செய்து செவிலிய துறையின் மாண்பினை மீட்டு வருகிறது ஆனால் அதிகாரம் கொண்ட அமைப்பாக அது இருக்கிறதா என்றால்? இல்லை? இந்தியா முழுவதும்  செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, குறைந்த ஊதியம் அதிகபட்ச வேலை என செவிலியர்கள் கொத்தடிமைகளாக மட்டுமே பாவிக்கப்படுகிறார்கள் என்றால் அது மிகையாகாது. தமிழக செவிலிய துறையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக செவிலியர்கள்  தர்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இது அரசு மற்றும் அரசு சார்ந்த இயக்ககமும் செவிலியர்களிடையே ஒரு பொறுப்பு அற்ற நிலையை உருவாக்கி அவர்களின் உரிமைகளை மறுக்க அல்லது மறைக்கப் எடுத்த முடிவாகும். இன்றைய சூழ்நிலையில் செவிலியர்களின் சமூக அந்தஸ்து என்பது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இதனை மாற்ற வெளியில் இருந்து ஏதாவது சக்தி வரும் என எ

NCD & CEMONC Government Order for Enhanement Contractual Pay

தமிழக அரசு மருத்துவமனைகளில் NCD மற்றும் CEMONC திட்டங்ககளில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு அரசானை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையை பெற இங்கு கிளிக் செய்யவும் 

Nursing Superintendent Grade - II Panel List for 2012 - 13

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 பதவி உயர்வு அளிப்பதற்கான பணி மூப்பு  பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. PLEASE CLICK HERE TO DOWNLOAD NURSING SUPERINTENDENT GRADE II PANEL LIST FOR 2012 - 13 முதல் பக்கம் தெளிவாக இல்லை, தெளிவாக கிடைத்தைவர்கள் அனுப்பி உதவவும் நன்றி. email address:- tnnurse.org@gmail.com

RCH ஒப்பந்த செவிலியர்களின் ஊதிய உயர்வும் சில விளக்கங்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் ஊதியம் அரசாணை ( நிலை ) எண் :- 342 நாள் :- 14/12/2012 வழி உயர்த்தி வழங்கப்பட்டது . அந்த அரசாணையில் சில புரிதல்கள் தேவைப்பட்டதால் அது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் வழி   தகவல்கள் கோரப்பட்டது . தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் N.R.H.M - TN, DIRECTOR அவர்களிடம் இருந்து பெறட்ட   அதிகார பூர்வ தகவல்கள் இங்கு அனைத்து செவிலியர்களின் பயன்பாட்டிற்காக தரப்பட்டுள்ளது 1. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காரணங்களால் RCH Scheme இன் கீழ் இரண்டு செவிலியர் (each staff done 12 hours duty) மட்டுமே பணி புரிகின்றனர் . அவர்களுக்கு அரசு ஆணை எண் 342 இன் படி , அவர்கள் 01/04/2012 முதல் பார்த்த கூடுதல் பணி நேரத்திற்கு (each staff done 12 hours duty) ரூபாய் 1000 நிலுவை தொகை வழங்க பட வேண்டுமா என்ற தகவல் தகவல் :   அரசாணை வெளியான தேதியில் (14/12/2012) இருந்து வழங்கப் பட வேண்டும் 2. அரசு ஆணை எண் 342 ( பிரிவு 4/II) இன் படி 01/04/2012 முதல