கடந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பில் சிறப்பு மருத்துவம் பயின்று முடித்த 416 சிறப்பு மருத்துவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையின்படி, 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற பணி நியமன கலந்தாய்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களில் நியமிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையின்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 437 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பப்பட்டன. அந்த வகையில், ஏழை எளியவர்களுக்கு தரமான மருத்துவ சேவை தங்கு தடையின்றி கிடைக்கும் வண்ணம், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாலும், ஏற்கெனவே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாலும், ஏற்கனவே ஒரு மருத்துவருடன் இயங்கி