Skip to main content

Posts

Showing posts from April, 2012

TNPSC தொகுதி - IV காலிப்பணியிடங்களுக்கு இணையம் வழியாக மட்டும் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2012 - 13 ஆம் ஆண்டுக்கான தொகுதி - IV பணியில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செயவதற்கு எழுத்துத் தேர்விற்கான 28.05.2012 வரை இணையம் வழியாக மட்டும் விண்ணப்பங்களை வரவேற்கிறது. சில அடிப்படை தகுதிகள்:-  கல்வி தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது தகுதி குறைந்த பட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 35 வயது (குறைந்த பட்ச கல்வி தகுதியை காட்டிலும் மேற்பட்ட கல்வி தகுதி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை) இது தொடர்பான மேலும் தகவல்களை அறிய இங்கு கிளிக் செய்யவும் 

"ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்திடுக!"
தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு (TNMPA) வேண்டுகோள்

தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவைருக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு (TNMPA) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இவ்வமைப்பின் மாநில தலைவர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்  அவர்கள் விடுத்துள்ள செய்தி வெளியீடு  தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 6000 ற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ. 4500 ம், இரண்டாம் ஆண்டில் ரூ. 5500 ம், மூன்றாம் ஆண்டில் ரூ. 6000 ம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.  அனைத்து பொருட்களின் விலைவாசியும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் மிக மிக குறைவான தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இச்செவிலியர்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்  எனவே தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவைருக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு வேண்டுகோள் விட

அரசு மருத்துவமனையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

தமிழக சுகாதார துறையின் அரசு மருத்துவமனைகளில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளின் பட்டியல் இங்கு தரப்பட்டு உள்ளது. இது புள்ளியியல் அலுவலரின் ஆய்வு மற்றும் சரிபார்த்தல் பணிக்கு சமர்ப்பிக்க வேண்டியவை  இங்கு கிளிக் செய்து இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் Records to be produced for validation Outpatient Department Outpatient Nominal Register Daily Outpatient Census chart daily disease classification for outpatient Referral in Register for outpatient Referral out Register for outpatient Minor operation register in the outpatient department dog bite register for outpatient ARV sub stock register Hypertension Clinic Register Diabetic Clinic Register dental Census chart dental extraction register Pharmacy Postmortem Register ARV Main Stock Register ASV Main Stock Register Laboratory Laboratory Investigation Register for Outpatient Laboratory Investigation Register for Inpatient Daily Census Ch

தமிழக அரசின் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு
{ அரசாணை எண் 123 / நிதி(ஊதியப்பிரிவு)த்துறை நாள்: 10—04—2012}

தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய 3 நபர் குழு ஒன்றினை அமைத்து உள்ளது. அரசாணை எண் 123 / நிதி( ஊதியப்பிரிவு)த்துறை நாள்: 10—04—2012. இதற்கு தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு அங்கிகாரம் பெற்ற சங்கங்களும், அலுவலக தலைவர்களும்,  தனி நபர்கள் மனு அனுப்பலாம் மனுக்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அரசு துணைச் செயலாளர்  நிதி(ஊதியப்பிரிவு)த்துறை  சென்னை - 09  என்ற அஞ்சல் முகவரிக்கோ அல்லது dspgrc@tn.gov.in   என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்  மனுதாரர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிவிக்க வேண்டும்  1) சங்கத்தின் பெயர் / வழக்கு தொடர்ந்த மனுதாரர் 2) அங்கீகரிக்கப்பட்ட தனி நபர் பெயர் / பதவி 3) முகவரி 4) தொடர்பு எண் 5) மின்னஞ்சல் முகவரி இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசின் செய்தி குறிப்பு  இங்கு கிளிக் செய்யவும் இது தொடர்பாக வெளியான அரசாணையை காண இங்கு கிளிக் செய்யவும்

மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு 2012 - 2013

தமிழ்நாடு அரசு சுகாதார துறை வரும் 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள திட்டங்களின் பட்டியல் கொள்கை விளக்க குறிப்பு இங்கு தரவேற்றம் செய்ய பட்டுள்ளது. இங்கு கிளிக் செய்து படிக்கவும் 

65 % அகவிலைப்படி உயத்தியதற்கான அரசாணை

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 58 % இருந்து 65 % ஆக உயத்தியதற்கான   அரசாணை  இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு  உள்ளது.   இதனை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

இந்தியாவில் செவிலியம் - வரலாறு

பழங்கால இந்திய ஆவணங்கள் செவிலிய பணியின் கொள்கை முறைகளை பற்றி விளக்குகின்றன அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாகவும் விளங்குகின்றது முதலில் இளைஞர்களே செவிலிய பணியில் சேர்ந்தனர், பின்னர் மகப்பேறு துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர் இந்திய நாட்டில் நிலவி வந்த ஜாதி முறைகள், கல்வி அறிவின்மை, பெண்களின் பின் தங்கிய நிலைமை, சம உரிமை அற்ற அரசியல் ஆகிய காரணங்களால் செவிலியத்துறை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது, 1664 இல் கிழக்கிந்திய கம்பனி தனது வீரர்களுக்காக சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு வீட்டில் முதல் மருத்துவ மனையை ஆரம்பித்தது இந்த மருத்துவமனையில் பணிபுரிய இலண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்து செவிலிய சகோதரிகள் வந்தனர் 1797 இல் சென்னையில் உள்ள ஏழைகளுக்காக மருத்துவர் ஜான் அண்டர்வுட் என்பவரின் பொருளுதவியுடன் ஒரு மகப்பேறு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது அன்றைய அரசாங்கம் 1854 இல் மகப்பேறு செவிலியர்களுக்கென ஒரு பயிற்சி பள்ளியை சென்னையில் உருவாக்கியது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மைய

தமிழக அரசு மருத்துவமனைகளின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் பட்டியல் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Please Click Here to Download the Government Hospital Lists Courtesy:- "Reflections" - Doctor Bruno's Blog

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியல் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Please Click Here To Download The List Of Primary Health Centers in Tamilnadu

முதுகலை செவிலியம் பட்ட படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 16-04-2012

தமிழக அரசின் முதுகலை செவிலியம் பட்ட படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 16-04-2012 விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக அரசின் இணையதளத்திற்கான வழி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. Directorate of Medical Education Chennai Admission to Post Graduate Degree M.Sc. (Nursing) for the year 2012 - 2013 1 List of Documents to be Downloaded 2 Prospectus 3 Application Form 4 Scrutiny Form 5 Template to be pasted on the Outer Cover

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms 

விடுப்பு மற்றும் விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பயன்படும் விடுப்பு மற்றும் விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பம் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.   இந்த விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்