வருமான வரி தாக்கல் (ITR Filing) – முக்கிய குறிப்புகள்

✅ ITR ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?

அதிகமாக TDS பிடித்திருந்தால் வரி திரும்பப் பெற (Refund) உதவும்.

வங்கி கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன், விசா போன்றவற்றிற்கு ITR ஒரு முக்கிய ஆவணமாகும்.

பங்கு சந்தை, வணிகம், சொத்து போன்றவற்றில் ஏற்பட்ட இழப்பை (Loss) அடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல (Carry Forward) ITR கட்டாயம்.

வருமான வரி சலுகைகள் மற்றும் கழிவுகளை (Deductions) பெற ITR தாக்கல் அவசியம்.


✅ யார் ITR தாக்கல் செய்ய வேண்டும்?

வருமானம் வரி விலக்கு வரம்பை (Basic Exemption Limit) மீறுபவர்கள்.

ஒரு ஆண்டில் ₹1 கோடி அல்லது அதற்கு மேல் நடப்புக் கணக்கில் (Current Account) பரிவர்த்தனை செய்தவர்கள்.

ஒரு ஆண்டில் ₹1 லட்சம் அல்லது அதற்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தியவர்கள்.

ஒரே முறையில் ₹2 லட்சம் அல்லது அதற்கு மேல் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்தவர்கள்.


✅ எந்த ITR Form யாருக்கு?

ITR-1 / ITR-2

சம்பளதாரர்கள்

ஓய்வூதியம் பெறுபவர்கள்

வட்டி வருமானம் பெறுபவர்கள்

குறிப்பிட்ட Capital Gain உள்ளவர்கள்

Audit தேவையில்லாதவர்கள்


ITR-3

தொழில் அல்லது வணிக வருமானம் உள்ளவர்கள்

Partnership Firm பங்குதாரர்கள்

Trading / Speculation வருமானம் உள்ளவர்கள்


ITR-4 (Sugam)

Presumptive Tax Scheme பயன்படுத்துபவர்கள்

சிறு தொழில் மற்றும் சிறு தொழில்முறை நிபுணர்கள்


📅 முக்கிய கடைசி தேதிகள் (FY 2025–26 / AY 2026–27)

ITR-1 & ITR-2: 31 ஜூலை 2026

ITR-3 & ITR-4 (Audit இல்லாதவர்கள்): 31 ஆகஸ்ட் 2026

Audit செய்ய வேண்டியவர்கள்: 31 அக்டோபர் 2026

Transfer Pricing வழக்குகள்: 30 நவம்பர் 2026

Belated Return: 31 டிசம்பர் 2026

Revised Return: 31 மார்ச் 2027


⚠️ தாமதமாக தாக்கல் செய்தால்

அதிகபட்சம் ₹5,000 வரை அபராதம்.

மொத்த வருமானம் ₹5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் அதிகபட்ச அபராதம் ₹1,000.

வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும், ITR தாக்கல் கட்டாயமானவராக இருந்தால் தாமதக் கட்டணம் விதிக்கப்படலாம்.

Post a Comment

Previous Post Next Post