Skip to main content

Posts

Showing posts from 2011

மகப்பேறு விடுப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அரசு துறையில் பணிபுரியும் தற்காலிக, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அரசு ஆணை வெளியிட்டால் தொகுப்பூதிய செவிலியர்கள் பயனைடைவர். இந்த செய்தி தகவலுக்காக இங்கு அளிக்கப்படுகிறது

தமிழ்நாட்டில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சுகாதார வசதிஇல்லாத கிராமங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன்அடிப்படையில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த, மாண்புமிகுதமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி திருச்சி சுகாதார மாவட்டம், மணச்சநல்லூர் வட்டாரத்திலுள்ள சமயபுரம்; வேலூர்சுகாதார மாவட்டம், வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டம், வாலாஜா வட்டாரத்தில் உள்ளசுமைதாங்கி; கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள பேஜிபள்ளி; கள்ளக்குறிச்சிசுகாதார மாவட்டம், திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாடு; சின்ன சேலம் வட்டாரத்திலுள்ளஅம்மாகளத்தூர்; நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள மதிரவேலூர்; திருப்பூர் சுகாதார மாவட்டம், பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி; பெரம்பலூர் சுகாதார மாவட்டம்,பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள எளம்பலூர்; ஈரோடு சுகாதார மாவட்டம், பெருந்துறை வட்டாரத்திலுள்ளகாஞ்சிக்கோயில்; நம்பியூர் வட்டாரத்திலுள்ள மளையம்பாளையம்; திருப்பத்தூர் சுகாதார மாவட்டம்,கந்திலி வட்டாரத்த

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வலைப்பூ ஹிந்து நாளேட்டில்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் வலைப்பூ நமக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வந்துள்ளது, பல அரசாணைகள் அந்த வலைப்பூ நடத்தி வரும் திரு. வெங்கட சுப்பரமணியன் அவர்கள் நாமும் பயன்படுத்த அனுமதி அளித்து ஆதரவு அளித்து வருகிறார் அவரின் வலைப்பூ இன்றைய 10.11.2011 ஹிந்து நாளேட்டில் பதிவிட்டு ஹிந்து நாளேடு பெறுமை பெற்றுள்ளது அந்த பத்திரிக்கை பகுதியை கீழே பார்க்கவும்

செவிலியர்கள் சான்றிதழ்களில் சான்றொப்பம் இடலாம்,

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சான்றிதழ்களின் உண்மை நகலை பரிசோதித்து சான்றொப்பம் இடலாம், சான்றொப்பம் இடும் அதிகாரிகளே  சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கு பொறுப்பு ஆவர். சான்றொப்பம் இட அனுமதி அளிக்கும் அரசாணை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நன்றி:- பொது சுகாதாரம் இன்று Click Here For attestation Power Extended to Group B Govt Servant G.O. Click Here for Classification of Government Servants G.O. Click Here for Green Ink Usage Clarification G.O .

தமிழ்நாடு அரசு செவிலியர்களின் புதிய ஊதிய முறை

தகுதிநிலை செவிலியரின் ஒரு நபர் குழு ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் நிர்ணயம் செய்த மாதிரி இந்த ஊதிய நிர்ணயத்தை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

2011 2012 முக்கிய மருந்து பொருட்களின் பட்டியல்

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூர்களுக்கு மருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குகின்றன. 2011 மற்றும் 2012 ஆம் வருடத்திற்கான முக்கிய மருந்து பொருட்களின் பட்டியல் இங்கு வெளியிடப்படுகிறது தறவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை

ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர் பணிக்கு தகுதியுள்ள பயிற்சி செவிலியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள் 40 மேலும் விபரங்களுக்கு www.jipmer.edu ஐ பார்க்கவும் விண்ணப்பம் மற்றும் விபரங்களை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் அனைவருக்கும்  வாழ்த்துக்கள்

சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகளில் செவிலியர் (Nursing Therapy) மற்றும் மருந்தாளுநர் (Integrated Pharmacy) பயிற்சி

சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகளில் செவிலியர் தெரபி (Nursing Therapy) மற்றும் இன்ட்டகிரேட்டடு மருந்தாளுநர் (Integrated Pharmacy) பயிற்சிக்கு தகுதியுடையவர்களிடம் இருந்து அரசால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை  www.tnhealth.org   இணையதளத்தில் இருந்து நேரடியாக தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 25.10.2011 மாலை 5.00   மணி ஆகும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

58 சத அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்விற்கான  அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கு வெளியிடப்பட்டுள்ளது Click Here to Download 58% DA Increase GO Tags:- Tamilnadu Dearness Allowance, Tamilnadu Dearness Allowance July 2011, Tamilnadu Government Dearness Allowance, Dearness Allowance July 2011, 

சுகாதாரத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு 2011 - 2012  கோரிக்கை எண். 19 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை டாக்டர். வி.எஸ். விஜய் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை அமைச்சர்  Health Family Welfare Policy Note 2011 -2012 Error: Embedded data could not be displayed.       நன்றி: பொதுசுகாதாரம் இன்று

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன

மருத்துவம் சார்ந்த 24 வகையான டிப்ளமோ - சான்றிதழ் படிப்புகள் 12.9.2011 முதல் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க 26 - ந்தேதி கடைசி நாள்  தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் பிளஸ் - 2 தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 24 வகையான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும், எஸ்,எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவி செவிலியர் பயிற்சி ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் கிண்டியில் உள்ள கிங் நிலையத்திலும் 12.09.2011 முதல் 26.9.2011 பகல் 12 மணி வரை வழங்கப்படும், சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.  ஆய்வகம், ரத்தம், டயாலிசஸ், முட நீக்கவியல், அறுவை அரங்கம், மயக்க மருந்து உதவியாளர், ஆகியவற்றில் பணிபுரிய ஏதுவான படிப்புகள்,  மருத்துவப்பதிவேடு நுட்பனர், செவிலியர் உதவியாளர் உள்பட 23 வக

சட்ட மன்றத்தில் சுகாதாரத்துறை அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை –10.9.2011 முன்னுரை:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை கருத்தில் கொண்டு,இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறுமுன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்றஉறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.              நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்றுஆகும். எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீக்குவதற்கான மருத்துவவசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரியஇலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனதுதலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.           அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதியதிட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன். 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும்செயல்படும்:- தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,53

பட்ட செவிலியர் படிப்பிற்கான தகுதி பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன Post Basic Nursing Merit List and Counseling Schedule Announced

பட்டய படிப்பு முடித்து பட்ட படிப்பு படிப்பதற்கான விண்ணப்பதாரர்களில் தகுதியுடைவர்களின் பெயர்பட்டியல் மற்றும் பட்ட படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நாட்கள் தமிழ்நாடு சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது பட்டய படிப்பு முடித்த செவிலியர்கள் (Diploma Nursing) , பட்ட படிப்பு படிப்பதற்கான (Post Basic BSc Nursing) , அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிறப்புவதற்கான கலந்தாய்வுகள் வரும் 15.09.2011 முதல் துவங்குகின்றன, கலந்தாய்வுகளில் பங்குபெற உள்ளவர்களின் தகுதி பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.Sc (NURSING) COURSE 2011 - 2012 SESSION தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனைத்து உண்மை சாண்றிதழ்களுடன் கீழ்காணும் அட்டவணைப்படி தகுதியான நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வுகளில் கலந்து கொள்ளலாம் என இணையதளத்தில் தெரிவித்து உள்ளனர் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கலந்தாய்வு கூடத்தில் இர

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியிட நேர் முக தேர்விற்கு தகுதியானவர்களின் பெயர்பட்டியல்

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியிடத்திற்கு நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்று நேர் முக தேர்விற்கு தகுதியானவர்களின் பெயர்பட்டியல் www.aiimsexams.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது,  தேர்வு எழுதிய தமிழக செவிலியர்கள் தங்களுடைய நிலையை www.aiimsexams.org என்ற இணைய தளம் சென்று பார்த்து அறிந்து கொள்ளவும்  நேர்முக தேர்வுகள் 26 - 09 -2011 முதல் 1 -10 -2011 வரை நடைபெறும்,  நேர்முக தேர்விற்கான அழைப்பு கடிதம் அவர்களின் இணையதளத்தில் ( www.aiimsexams.org ) விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என கூறி உள்ளனர்  நன்றி: திரு. கார்த்திக் அவர்கள் செவிலியர்    Tags: AIIMS,Aiimsexmas.Org, Aiims Result, Aiims Result 2011, Aiims.Ac.In, Aiims Delhi,Aiims Admit Card 2011, Aiims Nurse, Aiims Nurse Vacancy, Aiims Nurses Exam,Aiims Nurse Vacancy 2011, Aiims Exam For Staff Nurse, Aiims Exam For Nurses,

தகுதி நிலை செவிலியர், சிறப்பு நிலை செவிலியர் பணி அமர்த்துவதற்கு வேண்டிய படிவம்

தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியர்கள் 10 வருடங்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு தகுதி நிலை செவிலியர் பணி உயர்வும், அதற்கு 3 % ஊதிய உயர்வும் வழங்கப்படும், அது போல 20 வருடங்கள் பணிபுரிந்தால் அவரகளுக்கு சிறப்பு நிலை செவிலியர் பணி உயர்வும் அதற்கு 3 % ஊதிய உயர்வும் வழங்கப்படும், அதற்கான கருத்துரு படிவம் (Proforma) இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது   1. Selection Grade / Special Grade Appointment Proposal Proforma சிறப்பு நிலை/ தகுதி நிலை பணி உயர்வு கருத்துரு படிவத்தினை இங்கு தரவிறக்கம்  செய்து பயன்படுத்திக் கொள்ளவும் 1. Selection Grade / Special Grade Appointment Proposal Format

முன் ஊதியச் சான்றிதழ்

அரசில் இடமாறுதல் அடையும் பொழுது அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரிந்து வந்த நிலையத்தில் இருந்து முன் ஊதியச் சான்றிதழ் பெற வேண்டும் முன் ஊதிய சான்றிதழ் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது முன் ஊதிய சான்றிதழினை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் 1. Please Click Here to Download Last Pay Certificate

செவிலியருக்கான தகுதிகான் பருவம் முடித்தமைக்கான ஆணை பெற அனுப்ப வேண்டிய படிவம்

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களின் பணி ஓர் ஆண்டு    பணி முடிவில் வரன்முறை செய்யப்படும், பிறகு செவிலியர் அதற்கான தகுதிகாண் பருவத்தில் வைக்கப்படுவர், இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணை வழங்கப்படும், இத்தகைய அலுவலக நடைமுறைகளுக்கு கருத்துரு அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும், கருத்துரு படிவம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு  உள்ளது தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணை பெற அனுப்ப வேண்டிய மாதிரிக் கடிதம் மற்றும் கருத்துருவினை தறவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் Probation Declaration Covering Letter (Model) Probation Declaration Format Tags: Covering Letter For Regularization, Covering Letter For Probation Declaration, Regularization Format, Probation Declaration Format, Last Pay Certificate, lpc , Model Form For Last Pay Certificate In English, Model Form For Regularization, Model Form For Probation Declaration, Proforma for Regularization, Proforma Probation Declaration, Format Regularization, Format Probation Declaration, Regularization, Proba

செவிலியர்களுக்கான பணிவரண்முறை படிவம்

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஓர் ஆண்டு    பணி முடித்ததும் அவர்களின் பணி வரன்முறை செய்யப்படும்,   இத்தகைய அலுவலக நடைமுறைகளுக்கு கருத்துரு அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும், கருத்துரு படிவம் மற்றும் மாதிரிக் கடிதம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு  உள்ளது பணிவரன்முறைக்கான மாதிரிக் கடிதம் மற்றும் கருத்துரு தரவிறக்கம்  செய்து பயன்படுத்தி கொள்ளவும்        Covering Letter for Regularization (Model)      Proforma For Regularization   Tags: Covering Letter For Regularization, Covering Letter For Probation Declaration, Regularization Format, Probation Declaration Format, Last Pay Certificate, lpc , Model Form For Last Pay Certificate In English, Model Form For Regularization, Model Form For Probation Declaration, Proforma for Regularization, Proforma Probation Declaration, Format Regularization, Format Probation Declaration, Regularization, Probation Declaration

பட்டய செவிலியர் படிப்பிற்கான ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது

 தமிழ்நாடு அரசு பயிற்சி பள்ளிகளில் செவிலியர் பட்டய பயிற்சி படிப்பதற்கான தகுதி பட்டியல் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது அதற்கான வழி ( Link ) இங்கு செவிலிய பயிற்சி பெற போகும் மாணவ மாணவிகளுக்காக தரப்பட்டு உள்ளது  DIPLOMA IN NURSING 2011 - 2012 SESSION PROVISIONAL MERIT LIST   நன்றி : www.tnhealth.org 

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை!

 எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இதற்கான தகுதி தேர்வுகள் டில்லியில் மட்டுமே நடைபெறும். இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஒரு ஈமெயில் முகவரி இருக்க வேண்டும், www.aiimsexams.org யில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும், பிறகு அந்த ஈமெயில் முகவரிக்கு AIIMS இணையதளத்தில் இருந்து ஒரு வங்கி சலான் வரும், அந்த வங்கி சலானை மட்டுமே பயன்படுத்தி வங்கியில் பணம் செலுத்த முடியும் வங்கியில் பணம் செலுத்திய பிறகு மீண்டும் www.aiimsexams.org என்ற முகவரிக்கு சென்று உங்களை பற்றிய விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆன்லைனில் பதிவு செய்ய உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை மென்பதிவு  மற்றும் உங்கள் கையொப்பத்தினை இட்டு ஒரு தாளில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் இந்த முன்னேற்பாடுகளுடன் இணையதளைத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 8.8.2011 ஆகும் 1.எய்ம்ஸ் இணையதள பக்கம் 2.விண்ணப்பங்களை வரவேற்ற விளம்பரம்  3.விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான விளக்கம் 4.ஆன்லைன் விண்ணப்ப படிவத்திற்கான வழி Ta

செவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II ற்கு இணைப்பு செய்த இயக்குனரக கடிதம் மற்றும் விளக்கம்:

தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 லிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 ற்கு பதவி இணைப்பு (Merge) செய்து அரசு ஆணை வெளியிட்டு இருந்தது ஆனால் துறை வாரியான விளக்கம் மற்றும் அனுமதி வராமல் பல்வேறு இடங்களில் இன்னும் செவிலிய கண்காணிப்பாளர் 3 என்ற பதவி பயன்பாட்டில் இருந்தது வந்தது இதனை தெளிவுறுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்கள் வெளியிட்ட விதிமுறைகள் அடங்கிய கடிதம் இங்கு அரசு மருத்துவ துறை செவிலிய கண்காணிப்பாளர்களின் தகவல் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது செவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து, செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II ற்கு இணைப்பு செய்து இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை கடிதம்:  கடிதத்தை தரவிறக்கம் (Download)  செய்ய இங்கு கிளிக் செய்யவும்

ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் மீண்டும் பணி நியமனம் வழங்க வகுக்கப்பட்ட விதிகள்:

அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள், பணி பெற தவறினாலோ, பணி பெற்ற பிறகு தன்னிச்சையாக பணியில் இருந்து நின்றாலோ கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாக அரசு வெளியிட்ட ஆணை இங்கு உங்களுக்காக பதியப்பட்டு உள்ளது அரசாணையை PDF கோப்பாக தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அனுபவிப்பதற்கான அரசாணை

தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து அரசு மகளிர் ஊழியர்களும் ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அனுபவிக்கலாம் என்று அரசு கூறியிருந்தது, அதனை நிறைவேற்றும் விதமாக அரசு வெளியிட்ட அரசாணை இங்கு வெளியிடப்படுகிறது, படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்   அரசாணையை தரவிறக்கம் ( DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

செவிலியர் பட்ட படிப்பு (Post BSc Nsg) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

செவிலிய பட்டய படிப்பு முடித்து அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்  செவிலியராக பணிபுரிந்த செவிலியர்கள் பட்ட படிப்பு பயில விண்ணப்பங்கள் விநியோகிக்கப் படுகின்றன அதன் தகவலை கீழே காணலாம் 2011-2012 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த சுயநிதி கல்லூரிகளுக்கு ஒற்றை சாளர முறையில்  இரண்டு ஆண்டு BSc Nursing பட்ட படிப்பு (செவிலியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாகவே பெறப்பட முடியும், தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது  கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டது இணையதளத்தில் விண்ணப்பங்கள் 06.06.2011முதல்   16.06.2011 வரை தரவிறக்கம் (Download)  செய்ய கிடைக்கும் விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 16.06.2011 மாலை 5.00 மணி வரை விண்ணப்பத்தை  தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும் மேலும் விபரங்களுக்கு Tnhealth.org பார்க்க Tags: Tamilnadu Trained Nurses Post BSc Nursing Application, Tamilnadu Nursing Council, Post BSc Nursing Application, Post BSc

தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு அரசு பயிற்சி பள்ளிகளில் பட்டய செவிலியர் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசு வழங்கி வருகிறது, அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தலைமை மருத்துவமனையிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம், தமிழ்நாடு சுகாதார துறை இணையதளத்திலும் ( www.tnhealth.org )  விண்ணப்பங்களை தரவிறக்கம் ( Download ) செய்து செவிலியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 02-06- 2011 மாலை   5.00 மணி வரை மேலும் தமிழக அரசின் மருத்துவம், செவிலியர் பட்ட படிப்பு,  மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டய  படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன, ஆசிரியர் பயிற்சி ( www.Pallikalvi.in ), தொழிற்கல்வி ( www.tndte.com ) பயிற்சிகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன பட்டய செவிலியர் படிப்பிற்கான விண்ணப்பங்களை இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம் Tags: Tamilnadu Diploma Nursing Applications are issued from 18/05/2011 to 01/06/2011, Last date for applying Diploma Nursing In Tamilnadu Government is 01/06/2011, Tamilnadu Government Nurses Training, Tamilnadu Go

Five Day Off Letter from DMS for Communicationசெவிலியருக்கு ஐந்து வார ஒய்வு வழங்க வலியுறுத்திய இயக்குனரின் கடிதம்

தமிழக அரசு மருத்துவ துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாதத்தில் 5 (ஐந்து)  வார ஓய்வு வழங்கப்படுகிறது,  1990  களில் தமிழக மருத்துவ துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை இங்கு அனைத்து செவிலியர்களின் பயன்பாட்டிற்கு தரவிறக்கம் (Download)   செய்ய அளிக்கப்படுகிறது   Please click Here to Download this document as PDF Please click here to Download this file as PDF Please click here to Download this File as PDF  Format அரசாணை 1828, உதவி திரு. மணிமாறன், செவிலியர்

செவிலியர்களுக்கு தேவையான தொடர்பு தொலைபேசி எண்கள்

செவிலியர்களுக்கு தேவையான தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் தொலை அச்சு எண்கள், சில நேரங்களில் நமக்கு நமது உயர் அதிகாரிகளின் முகவரி, அல்லது அரசாங்கத்தின் தொலைபேசி எண்கள் போன்றவை தேவைப்படும், நமது தமிழ்நாடு அரசின் அனைத்து துறை தொடர்பான அரசாங்க அலுவலர்களின்  தொடர்பு முகவரிகள்  http://www.tn.gov.in/telephone/default.html இல் உள்ளது, இதனை PDF File ஆக Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் நமது செவிலியர்களுக்கு தேவையான சுகாதார துறையின் அனைத்து முகவரியும் இங்கு உங்களுக்காக தரப்பட்டு உள்ளது   சுகாதரா துறை  அமைச்சர் அலுவலகம் தொலைபேசி எண் :044 – 25670682 சுகாதார துறை செயலாளர்: HEALTH SECRETARY Health and Family Welfare Department, Secretariat, Fort St. George, Chennai, 600 009 FAX: 044 – 25671253 தொலைபேசி எண் : Principal Secretary: 044 – 25671875 Extension:5671 Ex-officio Spl. Secy: 044 – 25675459 Addl. Secretary: 044 – 24790283 நிதி துறை செயலாளர் FINANCE DEPARTMENT Secretariat, Fort St. George, Chennai 600 009 தொலைபேசி எண் : Principal Secretary: 044 – 25671173 Addl.Secretary: 044 – 25

PDF File களை படிக்க உதவும் ஒரு மென்பொருள்

இணையதளங்களில் இருந்து சில அரசாணைகள் அல்லது விண்ணப்பங்களை தரவிறக்கம் (Download) செய்யும் போது அது PDF File ஆக இருந்து நமது கணிப்பொறியில் அடோபி அக்ரோபாட் ரீடர் (Adobe ACrobat PDF Reader) இல்லையெனில் நாம் தரவிரக்கிய பகுதியை படிக்க இயலாது  இதற்கு ஒரு சிறந்த தீர்வு சுமத்ரா பி டி எப் 1.1 மென்பொருள் ஆகும், இதன் சிறப்பு என்னவெனில் இதனை கணிப்பொறியில் நிறுவாமலேயே (Install) உபயோகப்படுத்த முடியும் கிழே உள்ள Sumatra PDF வரியை கிளிக் செய்தால் நீங்கள் சுமத்ரா பி டி எப் 1.1 தரவிறக்கலாம், நேரடியாக அந்த பைலை கிளிக் செய்து பயன்படுத்தலாம், Please Click here to download Sumatra PDF Application இதன் மூலம் PDF பைல்களை படிக்க முதலில் இந்த மென்பொருளை திறந்து கொண்டு அதில் உள்ள OPEN (File --> Open) கட்டளை மூலம் தேவையான பைலை திறக்கவும் அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave L etter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை (PDF File) கிழே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும் , Please Click here to download Leave Letter (Tamil), MC Form, Fit to Join Duty

நூற்றாண்டு சர்வதேச மகளிர் தினம் (1911-2011 )

சர்வதேச மகளிர் தினம்: சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, உழைக்கும் பெண்களின் உரிமைகளை காக்கவும், ஓட்டுரிமை கேட்டும், உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கேட்டும் --- நடத்தப்பட்ட ஒரு போராட்டமே இன்று சர்வதேச அளவில் மகளிர் தினமாக கொண்டாட வழி வகுத்தது என்றால் அது மிகை ஆகாது International Women,s Day Logo: பெண்களின் உரிமைகள்: பெண்களின் நிலை கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கி இருந்து வந்தது, ஆண் பெண் ஏற்ற இறக்கம், ஆணுக்கு பெண் சமம் இல்லா நிலை நீடித்து, பெண்களை அடிமையாகவும், வீட்டிற்குள்ளும் பூட்டி வைத்து இருந்தனர் இந்த நிலை பெண்களின் குரலினை உயர்த்தி அவர்களின் உரிமைகளை கேட்க வைத்தது முதல் போராட்டம்: 1908 ஆம் ஆண்டு 15000 மகளிர் “குறைந்த வேலை நேரம், தகுந்த ஊதியம், ஓட்டுரிமை” கேட்டு நியூயார்க் நகரினை முற்றுகை இட்டு போராட்டம் செய்தனர், இது அனைத்து பெண்ணினத்தையும் எழுச்சியுறச் செய்தது முதல் மகளிர் தின கோரிக்கை: 1910 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில் பெண்களுக்கான ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது, அதன் விளைவாக 17 நாடுகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள்

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

கடந்த ஐந்து ஆண்டுகளில் செவிலிய துறை பத்திரிக்கை செய்தி

கடந்த ஐந்து வருடங்களில் நமது அரசு செவிலிய துறையில் செய்த சாதனைகளை இன்றைய நாளிதழ்களில் பட்டியலிட்டு இருந்தது அந்த பத்திரிக்கை செய்தி விளக்கம் இங்கு உள்ளது "இங்கு கிளிக் செய்து PDF File ஆக Download செய்து கொள்ளவும்" TAGS: Press release about nurses dapartment in tamilnadu government, new 201 nurses posting, newspapper article about new posting, conract basis new posting, new cosolidated basis posting for nurses in tamilnadu

செவிலியர்கள் பணி இட மாறுதல் பெற பயன்படுத்த வேண்டிய மாதிரி விண்ணப்பம்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் பணி இட மாறுதல் (Transfer) பெற இயக்குநர், அவர்களிடம்  மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தில் விண்ணப்பம் தர வேண்டும். விண்ணப்பத்தின் ஒரு மாதிரி படிவம் தரவிறக்கம் (Download) செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பம் ஒரு மாதிரி மட்டுமே அதில் உள்ள காரணங்கள், பணிபுரியும் இடம், மற்றும் பணியில் இணைந்த நாள் ஆகியவற்றை தங்களின் நிலைக்கு ஏற்ப மாற்றி எழுதி கொள்ள வேண்டுகிறோம் விண்ணப்பம்-1 இனை தரவிறக்கம் ( Download ) செய்ய இங்கு கிளிக் செய்யவும் Please click above link to download application - 1 as a word Document விண்ணப்பம் - 2 இனை தரவிறக்கம் ( Download ) செய்ய இங்கு கிளிக் செய்யவும் Please click above link to download application - 2  as a word Document மேலே உள்ள விண்ணப்பம் - 1   மாதிரி விண்ணப்ப கடிதம் ஆகும், அவற்றில்  உள்ள பெயர், பணிபுரியும் இடம், பணிபுரியும் மாவட்டம், இட மாறுதல் கோரும்  இடம், பணியில் இணைந்த நாள் ஆகியவை சிவப்பு வண்ணத்தால் இருக்கும் அவற்றை தங்களின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி விண்ணப்பம் தயாரித்து எழுதிக்கொள்ளவும், Disclaime

கணிப்பொறி வாங்கிட முன்பணம்

கணிப்பொறி வாங்கிட முன்பணம் (அரசு ஆணை எண் 231, நிதித்துறை நாள் 1.4.1992) 01.  அலுவலகத் தலைவர் சான்றளிக்கும் இனங்களில் ரூ 6,500/- ம் அதற்கு மேலும் அடிப்படை சம்பளம் வாங்கும் அலுவலருக்கு கணிப்பொறி வாங்கிட முன்பணம் ஒப்பளிக்கலாம் (அ.ஆ.எண் 498, நிதித்துறை நாள் 20.09.2004) 02.  கணிப்பொறி வாங்க முன்பணம் ரூ 50,000 அல்லது கணிப்பொறியின் விலை இதில் எது குறைந்ததோ அத்தொகையை முன்பணமாக வழங்கலாம் (அ.ஆ.எண்.59, நிதி, நாள் 16.01.2006) 03.  இம் முன்பணத்திற்கு வட்டி வீதம் 10% (அ.ஆ.எண் 94, நிதி துறை , நாள் 14.03.2008)

தொழிற்சங்க இலக்கணம்

தொழிலாளர் இயக்கம் பத்தாயிரம் முறை விழும்; எழும்; வடுபடும்; மீண்டும் எழும்; அதன் குரல்வளை இருக்கப்படும்! உணர்வற்று போகும்வரை ! தொண்டை அடைக்கப்படும்! நீதிமன்றம் கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குண்டர்களால் தாக்கப்படும்! பத்திரிக்கைகளால் வசை பாடப்படும் பொது மக்களின் புருவ நெரிப்பும்கூட போர் தொடுக்கும்; அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்! ஒடுகாளிகளால் மறுப்புரைகள் கூறப்படும்! சூதாடிகளால் பலி கொடுக்கப்படும் ! உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்! கொலைகளால் நடு வீதியில் விடப்படும் ! துரோகிகளால் வஞ்சிக்கப்படும்! அட்டைகளால் உறிஞ்சப்படும்! தலைவர்களால் கூட விற்று விடப்படும் ! ஓ ...................... இவ்வளவு சோதனைகள் இருந்தாலும் இந்த வையகம் இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்! ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும் பாட்டளிகளை விடுதலை செய்வதே வரலாற்றுக் கடமையாகும். இதன் வெற்றி சர்வ நிச்சயம் ___________________________________________________________________ 1904 ஆம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிக்கையில் ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது _

செவிலியருக்கான ஒழுக்க நெறிகள்: (Code of Ethics)

செவிலியரின் ஒழுக்க நெறிகள் 1953 ஆண்டு ஜூலை திங்கள் 10ஆம் நாள், பிரேசிலில் உள்ள சாஓ பவுலோ என்னுமிடத்தில், சர்வ தேச செவிலியர் குழுமத்தால் ஏற்படுத்தப்பட்டு மீண்டும் 1964 இல் திருத்தம் செய்யப்பட்டது 1. செவிலியர்கள் நோயாளிகளுக்கு சமூக, பொருளாதார, தனிநபர் பேதமின்றியும், நோய்த் தன்மையை மனதில் கொள்ளாமலும் ஒரு மனிதனுக்குரிய மரியாதையோடு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் 2. செவிலியரின் அடிப்படைக் கடமைகள் என்பவை மக்களின் உயிரைக் காப்பது, அவர்களின் வேதனைகளைக் குறைப்பது அல்லது நீக்குவது மற்றும் அவர்களின் உடல் நலம் முன்னேற்றமடைய உதவுவது ஆகியவைகயாகும் 3. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியப் பணியை அளிக்க வேண்டும். அது போல் நன்னடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும் 4. செவிலியர்கள் வெறும் பயிற்சி மட்டுமின்றி, தகுந்த அறிவும் திறமையும் கொண்டு பணிபுரிய வேண்டும், அவற்றை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும் 5. நோயாளிகளின் மத நம்பிக்கைகள் மதிக்கப் பட வேண்டும் 6. செவிலியர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை அவசியமின்றி மற்றவர்களுக்கு வெளியிடக் கூடாது 7. செவிலியர்கள் தமது கடமைகளை