Whatsapp 96263 60763 என்ற எண்ணில் வந்த செய்தி, சில மாற் ற ங்களுடன். மருத்துவத்துறையில் முன்பு இல்லாத பிரச்சனைகள் தற்போது உருவெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் தொலைநோக்கு பார்வைஇன்மையும் , அலட்சியமும் ஆகும். 10 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு வார்டில் சானிட்டரி ஒர்க்கர், லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட், நர்சஸ் என 5 பேர் பணிபுரிந்தனர். ஒரு குறிப்பிட்ட பணி நடக்கவில்லை எனில் அது சார்ந்த குறிப்பிட்ட நபருக்கு மெமோ எழுதப்பட்டு தனது மேலதிகாரிக்கு செவிலியர் தகவல் கொடுப்பார். விசாரணை செய்து பிரச்சனை தீர்க்கப்படும். ஆனால் இன்று ஆள்குறைப்பு என்ற பெயரில் லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட் என்ற 3 பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை. சானிட்டரி ஒர்க்கர் போன்றோரும் தனியார் மயமாக்களில் தனியார் வசம் சென்றுவிட்டது. இதனால் மீதம் இருக்கும் செவிலியர்கள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல கண்டனத்துக்குரியதும், கவனிக்கப்படக்கூடியதும் கூட. ஏனென்றால், யார் எதற்கு பொறுப்பு என்று தெரியாத அதிகாரிகளும், மருத்துவர்களும் பொதுமக்கள் போல நோயாளிகளு