Skip to main content

Posts

Showing posts from 2012

DA Table

From Date DA % 01-07-2006 2 01-01-2007 6 01-07-2007 9 01-01-2008 12 01-07-2008 16 01-01-2009 22 01-07-2009 27 01-01-2010 35 01-07-2010 45 01-01-2011 51 01-07-2011 58 01-01-2012 65 01-07-2012 72 01-01-2013 80 01-07-2013 90 01-01-2014 100 01-07-2014 107

இ.எஸ்.ஐ பெங்களூரு, டெல்லி, மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

இ.எஸ்.ஐ பெங்களூரு, டெல்லி, மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். பெண் செவிலியர்களுக்கு கட்டணம் இல்லை. பெங்களூரு இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க தகவல்கள் பெங்களூரு இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க இணையதளம் டெல்லி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க தகவல்கள் டெல்லி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க இணையதளம் நன்றி:- ஜகராஜ்

24 Hours Services in PHC Duty GO

பொது சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் பணி நேரம் பற்றிய அரசானை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இந்த அரசானை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Please Click Here to Get the continuance of 24 Hours Services in 250 PrimaryHealth centres with staff Nurse Medical officers to be on call duty Govt Order

Public Holidays for the year 2013

தமிழக அரசு 2013 ஆம் வருடத்திற்கான பொது விடுமுறை நாட்கள்  பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதற்கான அரசானை இங்கு தரவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. Please Click Here to get  Public Holidays for the year 2013 Govt Order  

செவிலியர்களே மலாலா சிறுமியின் தீரம் கேளீர்!!!

பாகிஸ்தானில் ஒரு சிறுமி அவளின் 11 வயதில் தாலிபான்களால் பெண் குழந்தைகள் படிக்க கூடாது என்று கூறி பள்ளிகள் மூடப்பட்டது, அன்றே கதறி அழுது அவர்களை தடுத்தவள் இந்த மலாலா என்ற சிறுமி,    அதோடு  நின்றுவிடாமல் இது தொடர்பாக சமூக வலை தளங்களான பேஸ்புக், வலைப்பூ போன்றவற்றில் எழுதி அங்கு நடைபெறும் அநியாயங்களை உலகம் அறிய செய்தாள். பெண் சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கு எதிராக 11 வயதில் போராட துவங்கினாள் . இதன் விளைவாக அந்த சுமாட் வாலி கிராமத்தில் பாக்கிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து பெண் குழைந்தைகள்  கல்வி கற்க நடவடிக்கை எடுத்தது  சரி இதற்கும் செவிலியர்களுக்கும் என்ன தொடர்பு என கேட்பது புரிகிறது. இன்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது நம் வேலை இல்லை என தெரிந்தும் பெருக்குவது முதல் இரவு காவலர்கள் வரை அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்.  இது பற்றி DD இடம் கூறினால் அவர் Deputation போட்டு விடுவார்.   BMO உன்னை வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிவிடுவேன் என கூறுகிறார். இதையெல்லாம் விட மேலாக செவிலியர்கள் கூட்டமாக கூடுவது அரசுக்கு எதிரானது அதனால் அவர்கள் மாநில மாநாட்டில் கல

பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:- 26-11-2012 மாலை 5.00 மணி வரை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்:- 26-11-2012 மாலை  5.00 மணி வரை. இது தொடர்பான செய்தி தமிழக அரசின் சுகாதார துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது. சுகாதார துறை இணையதளமான www.tnhealth.org செல்ல இங்கு கிளிக் செய்யவும்  விண்ணப்ப படிவம் பெற இங்கு கிளிக் செய்யவும்  படிப்பு விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்  நன்றி:- www.tnhealth.org

Donation of Body after Death Government Letter

மருத்துவ கல்வி மாணவர்களுக்கு உடல் தானம் அளிக்க அரசு வகுத்துள்ள வழிமுறைகள் மற்றும் படிவம் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. படித்து பயன் பெறவும். Please Click Here Donation of Body After Death.pdf Donation of Body After Death Updation1.pdf நன்றி:- டாக்டர்.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் http://www.doctorsandlaw.com http://www.payanangal.in http://www.doctorbruno.net

"சேவைக்கு சம்பளம் இல்லை பணி நிரந்தர பலனும் இல்லை" - தினமலர் செய்தி

தினமலரில் வந்த செய்தி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இன்னும் எத்தனை பலிகள் வேண்டும் இந்த செவிலியத்திற்கு?

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தவர் திரு. கே. கார்த்திகேயன், 1993 - 1996 இல் செவிலிய பயிற்சி பெற்றவர். இவர் இன்று (23-10-2012) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் அகால மரணமடைந்தார். இரவு பணி புரிந்து வந்த செவிலியர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வாந்தி  இருந்து வந்துள்ளது. மிகவும் உடல் நிலை சரி இல்லாத நிலையில்  விடுப்பு எடுக்க இருந்தவருக்கு. டெங்கு நோய் பரவுவதாலும், அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதாலும் செவிலியர்கள் யாரும் எவ்வித விடுப்பும்  எடுக்க கூடாது என அலுவலக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவருக்கும் இரவு பணியில் இருப்பதால் விடுப்பு எடுக்க கூடாது என கூறப்பட்டு உள்ளது. 22-10-2012 அன்று இரவு பணிக்கு வந்த செவிலியர் திரு. கார்த்திகேயன்  அவர்கள் மிகவும் உடல் நிலை சரி இல்லாத  நிலையில் 22-10-2012 அன்று  ஆய்வுக்கு வந்த இணை இயக்குனர் அவர்களிடம்  தனது நிலையை விளக்கி கூறி மருத்துவ விடுப்பு வழங்க கேட்டு உள்ளார். இணை இயக்குனரின் அனுதாபத்திற்கு பிறகு அவருக்கு விடுப்பு வழங்க அனுமதிக்கப்பட்டு

Injection Iron Sucrose Guidelines

கர்ப்ப கால இரும்புச் சத்து குறைபாடுகளை சரி செய்ய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி உள்ளன. அந்த நெறிமுறைகள் தங்களின் தகவலுக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது       நன்றி :- செல்வி. கலைச்செல்வி, செவிலியர்

TREATMENT GUIDELINES FOR SNAKE BITE AND SCORPION STING FOR EDUCATIONAL PURPOSE ONLY

தமிழக சுகாதார துறை வெளியிட்ட பாம்பு கடி மற்றும் தேள் கொட்டும் சிகிச்சை வழிமுறைகள் இங்கு செவிலியர்களின் தேவைக்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது. வழிகாட்டுமுறையில் குறிப்பிட்டுள்ளவாறு இது ஒரு வழிகாட்டும் கையேடு மட்டுமே இதில் குறிப்பிட்டுள்ள மருந்துகள் மற்றும் அவற்றின் பின்விளைவுகளை படித்து அறிந்து கொள்ளவும். மேலும் சிகிச்சை முறை பற்றி அவ்வப்போதைய முன்னேற்றங்களை அறிந்து செயல்படவும். இது ஒரு படித்து அறிய மட்டுமே Please Click Here to Download or View the Document Courtesy:- TNHSP and Dr. SAGINDAR

RRB Recruitment Notification

ரயில்வே துறையில் செவிலியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரம் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது PLEASE CLICK HERE FOR RRB RECRUITMENT

தமிழக அரசு செவிலியர்களின் பஞ்சப்படி 7 % உயர்வு

தமிழக அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பஞ்சப்படி (DA) 7 % உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்முலம் ஏற்கனவே 65 % ஆக இருந்த DA இப்போது 72 % ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அரசாணையை பெற இங்கு கிளிக் செய்யவும்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நான் நரை கூடிக், கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கு இரை என பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ? பேடி மனிதன்கள் பல கூடி அவர் கேடி தன்மை நீ செய்தால், கூடும் கூட்டம் குலையும் என நினைத்தாயோ இல்லை எம் கூட்டம் அஞ்சி நடுங்கி குலை கெஞ்சி விழும் என நினைத்தாயோ  என்ன செய்யும் இந்த சின்னஞ் சிறு கூட்டம் என நினைத்தாயோ வாடும் மனம் அல்ல இது வலிமை குறையும் குளம் அல்ல இது  வஞ்சகம் பல வரினும் எஞ்சி வடிவது அல்ல இது. சோகம் பல உண்டு இங்கு வேகம் பல உண்டு இங்கு இருப்பினும் சோதனைகள் தான் எந்தன் தோள்களை திடப்படுத்தும். வீழ்வேன் என்று நினைத்தாயோ இல்லை வீழ்த்துவேன் என்று பயந்தயோ பல வஞ்சக செயல்கள் எங்களின்  கூட்டத்தை கலைக்க செய்ததது போல் ஒரே ஒரு செயல் இந்த நிரந்தரத்திற்கு  செய்து இருந்தால் 6000 செவிலியர்களில் 1000 பேருக்காவது நிரந்தரம் கிடைத்து இருக்கும் என்றும் அன்புடன் உமாபதி

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்

 1  திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2  திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3  வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4  பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்.  பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5  தகுதிகள் / நிபந்தனைகள்:-   அ) கல்வித் தகுதி திட்டம் 1  1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.   3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2  1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ

செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 ஆக இப்போது பதவி ஈற்றவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் ஆலோசனை

தற்போது அரசு மருத்துவமனைகளில் செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெற்றுள்ளவர்களுக்கு  அவர்களின் ஊதிய நிர்ணயத்தை (Pay Fixation) ஐ "ஜனவரி மாத ஊதிய உயர்விற்கு (ஜனவரி மாதத்தில் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு மட்டும்) பின் பெற்றால் அவர்களுக்கு ஜனவரி மாத ஊதிய உயர்வு 3 % மற்றும் செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு 3 % ஊதிய உயர்வு என ஒட்டு மொத்தமாக 6% ஊதிய  உயர்வுடன் ஊதிய நிர்ணயம் பெறலாம்.

பட்டய செவிலிய படிப்பு 2012 - 13 ற்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் பட்டய செவிலிய படிப்பிற்கான 2012 - 13 கல்வி ஆண்டிற்கான   தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது அதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும். தகுதி பட்டியலை  தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் நன்றி:- www.tnhealth.org

பட்டய செவிலிய (DIPLOMA NURSING) படிப்பிற்கு பின் படிக்கும் பட்ட செவிலிய படிப்பிற்கான (POST BSC NURSING 2012 -13) தகுதி பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் பட்டய செவிலிய (DIPLOMA NURSING) படிப்பிற்கு பின் படிக்கும் பட்ட செவிலிய படிப்பிற்கான (POST BSC NURSING) தகுதி பட்டியல் மருத்துவ கல்வி இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பெற இங்கு கிளிக் செய்யவும் நன்றி:-  WWW.TN.GOV.IN

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப மாதிரி

தமிழக அரசு ஊழியர்கள் தங்களது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பிலிருந்து 15 நாட்களை அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதற்கான ஊதியம் மற்றும் பிற படிகளை பெறலாம். இத்தகைய நடைமுறைக்கு அலுவலகத்தில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்  நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு முன்பு விண்ணப்பம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண் செய்ய அளிக்க வேண்டிய விண்ணப்ப மாதிரி ஒன்று இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். இங்கு கிளிக் செய்து ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் விண்ணப்ப மாதிரியை தரவிறக்கம் செய்யவும்

தமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சரின் புதிய காப்பீட்டுத் திட்டம் படிவம், மற்றும் அரசாணை

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4,00,000 ரூபாய்க்கு காப்பீடு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள காலத்தில் பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மீண்டும் புதிய அட்டை வழங்கப்பட உள்ளது. அது வரை பழைய காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தலாம். இதுவரை காப்பீட்டு திட்ட அடையாள அட்டை (காப்பீட்டு அடையாள எண்) பெறாதவர்களும், புதிதாக பணியில் இணைந்தவர்களும் அளிக்க வேண்டிய விண்ணப்பம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெற பயண்படுத்த வேண்டிய படிவத்தை இங்கு கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும் . இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை, சிகிச்சை பெற முடிந்த நோய் பட்டியல் மற்றும் மருத்துவமனைகள் அடங்கிய அரசாணையை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். நன்றி:-  WWW.TN.GOV.IN

செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 1 அலுவலர்கள் பயன்படுத்த வேண்டிய மருத்துவச் சான்று மாதிரி படிவம்

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் செவிலிய கண்காணிப்பாளர் நிலை I பதவியில் உள்ளவர்கள் அரசிதழ் (GAZETTED OFFICER) பதவி ஆகும். அரசிதழ் பதவி வகிக்கும் செவிலியர்கள் மருத்துவ விடுப்பு கோரும் மருத்துவ சான்றிதழ் தனியானது அப்படிவம் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் இங்கு கிளிக் செய்து அரசிதழ் பதவி அலுவலரின் மருத்துவ சான்று விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 10.08.2012 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 10.08.2012 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் To know more details about this click here

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடனின் உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவியையும் ரூ.4 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிகரித்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பண கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியும், அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஏப்ரல் 30-ம் தேதி வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப

சங்கம் மீண்டும் சாதித்தது

தமிழ்நாடு அரசு சுகதரத் துறையில் செவிலியர்களுக்கென  உள்ள சங்கம் பல்வேறு செவிலியர் விரோத நடவடிக்கைகளில் சாதித்து வருகிறது. செவிலியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று தரவேண்டிய தர ஊதிய நிகர  அடிப்படை ஊதியமான ரூ .10610/-  ஐ பெற்று தராமல் தன்னை அரசுக்கு என அமைக்கப்பட்ட சங்கமாக செயல்பட்டு "இஷ்டம் இருந்தால் வேலை செய் இல்லைனா  எழுதி கொடுத்துட்டு வெளிய  போ" என வீர வசனம் பேசி ஒரு மாபெரும் பேரணியை பொய்க்கச்  செய்தது முதல் சாதனை. செவிலியர்களில் 10 வருடம் முடித்தாலும் செவிலியர் அவர் 20 வருடம்  முடித்தாலும் செவிலியர் 30 வருடம் முடித்தாலும் செவிலியர் ஆக தான் பணி புரிந்து வருகின்றனர். பணி வருடத்திற்கு தகுந்த பதவி உயர்வு என்பது கனவாகவே உள்ளது செவிலியர்க்கு. (ஒரு இளநிலை உதவியாளர் [கிளார்க்] உடனடியாக உதவியாளர் பணியை பதவி உயர்வாக பெறும்போது செவிலியர்களுக்கு இதுபோல் இல்லாதது சாபக்கேடு) 30 வருடங்களுக்கு பிறகு கிடைத்த செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 3 பதவியையும் அரசுக்கு ஒப்படைத்து  செவிலியர்களுக்கு மேலும் துரோகம் இழைத்துள்ளது ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க கோரி சங்

பட்ட செவிலியர் படிப்பு (POST BASIC B.Sc NURSING) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22-06-2012 ஆகும்.

தமிழக சுகாதாரத் துறையில் பட்டய செவிலியர் படிப்பு (Diploma in Nursing) முடித்தவர்கள் பட்ட செவிலியர் (POST BASIC B.Sc NURSING) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த செவிலியர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22-06-2012 ஆகும். Please Click Here to Download the Prospectus . Please Click Here to Download the Application and Scrutiny Form Courtesy:-  www.tnhealth.org 

செவிலிய பட்டய படிப்பிற்கு (Diploma in Nursing) வரவேற்கப்படுகிண்றன. கடைசி நாள் 22.06.2012

தமிழக் சுகாதார துறையின் மருத்துவமனைகளின் பட்டய செவிலியர் பயிற்சிக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22.06.2012 ஆகும். விண்ணப்பங்கள் தமிழக அரசின் சுகாதார துறையின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Please Click Here to Download Diploma Nursing Prospectus 2012 and 2013 Session Please Click Here to Download Diploma Nursing Application and Scrutiny Form Courtesy:- Health and Family Welfare Department, Government Of Tamilnadu 

செவிலியர்களின் அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் (PART - III) இந்த அடிப்படை உரிமைகளை பிரிண்ட் எடுக்க இங்கு கிளிக் செய்து வரும் PDF File ஐ பயன்படுத்தவும் அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி அடிப்படை உரிமைகள் ஆகும். மக்களால் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மக்களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் காப்பாற்ற அடிப்படை உரிமைகள் அவசியமானவை ஆகும். அடிப்படை உரிமைகள் அரசின் ஆணைகள் மற்றும் நடவடிக்கைகளின் எல்லைகள் ஆகும். இந்த உரிமைகள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைகள் ஆகும். அனைவருக்கும் பொருந்தும். அரசின் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பை விட சட்டத்தின் அரசை அமைப்பதே அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்போடு சேர்த்ததன் நோக்கமாகும். இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் 1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14) 2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15) 3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16) 4. தீண்டாமை ஒழிப்பு(பிரிவு-17) 5. பட்டங்கள் ஒழிப்பு(பிரிவு-18) 6. ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22) 7. சமய உரிமை(

பட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்:- 15-06-2012

தமிழ்நாடு சுகாதார துறையில் பாராமெடிக்கல், மற்றும் பட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 15.06.2012 மாலை 5.00 மணி வரை. விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய 1. Please Click here to Download Prospectus 2. Please Click Here to Download Application and Scrutiny Form

Tamilnadu Nurses Federations Website

தமிழ்நாடு செவிலியர்கள் கூட்டமைப்பின் அதிகார இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. WWW.TNFWEBSITE.COM இந்த இணையதளம் தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்பின் தோற்றம் மற்றும் வரலாற்றினை தருகிறது. சென்று பயனடையவும்

செவிலியர் செய்ய வேண்டாத பணிகள்

தமிழக சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு அளிக்கப்படும் பணிகள் பல. பல்வேறு நிலைகளில் அவைகள் செவிலியர்களின் பணியாக இல்லாத போதும் அவற்றினை நோயாளர் நலன் கருதி செய்து வந்துள்ளோம். ஆயினும் செவிலியர்கள் அதுபோன்ற பணிகளை செய்ய வற்புறுத்துதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஒரு நல்ல நிர்வாகி இது போன்ற பணிகளை (செவிலியர் செய்ய வேண்டாத பணிகளை) செவிலியர்களை செய்ய கோரா மாட்டார். எனவே செவிலியர்களி செய்ய வேண்டாத பணிகள் என்னென்ன என அளிக்கப்பட்ட பட்டியல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். இதனை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

விஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை

விஜயா குழும செவிலியர்கள் குறைந்த பட்சம் ரு.15000 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தில் 15 விழுக்காடு ஊதிய உயர்வு ஆண்டு தோறும் வழங்க வேண்டும். பணியில் சேர்ந்த உடன் சரிபர்ப்புக்கு பின்னர் செவிலியர்களின் படிப்பு சான்றிதழ்களை  வழங்க வேண்டும், ரிஸ்க் படியை உயர்த்த வேண்டும், விடுதி கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை 20 நாட்களுக்கு முன்னரே நிர்வாகத்திடம் முறையாக அளித்துள்ளனர்.  ஆனால் வழக்கமான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் செவிலியர்களின் மீது ஏவி விடப்பட்டு உள்ளன. செவிலியர்களை மிரட்டியும் பழிவாங்கும் நோக்கத்தோடு சங்க நிர்வாகி பேபி சபீனாவை பணி நீக்கம் செய்தும் உள்ளனர்.  எனவே இது போன்ற அடக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாய சூழலில் உள்ள செவிலியர்கள் 28.05.2012 அன்று காலை 6.00 மணி முதல் வேலை நிறுத்தம் செய்ய ஏக மனதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது. தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடி தீர்வு காணவேண்டும் என தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்  தலைவர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்

மருத்துவமனையில் பணியாளர்களின் பணிகள் பற்றிய இயக்குநரின் அறிவுறை

சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் தூய நிர்வாக மேலாண்மைக்காக இயக்குநர் வழங்கிய அறிவுறைகள் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். இதனை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

மருத்துவமனை மேலாண்மை (HMIS) திட்ட அரசாணை

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தியுள்ள மருத்துவமனை மேலாண்மை திட்டத்தின் அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்கு இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.  இந்த அரசாணையில் திட்டத்தின் செயல்படுத்தும் முறை. பதிவேடுகளின் வகைகள் ஆகியன அளிக்கப்பட்டன. செவிலியர்களுக்கு தேவையான எந்த எந்த பதிவேடுகள் செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றிய பட்டியல் இதில் இணைத்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்  இந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

செவிலியர் தின கருத்தரங்கம்

செவிலியர் தின கருத்தரங்கம் 20 . 05 . 2012 அன்று தமிழ்நாடு சிறு குறுந்தொழில் சங்கம், எண் 10 , ஜி. எஸ். டி. ரோடு, கிண்டி, சென்னை - 32  ல் நடைபெற்றது. செவிலியர் தின கருத்தரங்க அழைப்பிதழ். செவிலியர் தின கருத்தரங்கில் டாக்டர் இரவீந்திரநாத் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார். மையத்தில் சுதந்திர போராட்ட வீரர். தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள். தினமணி செய்திகள். ஜனசக்தி புகைப்படம். ஜனசக்தி செய்திகள்

செவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான அரசாணை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.500 /- சிறப்பு படி (தேசிய ஊராக சுகாதார திட்ட படி) பெறுவதற்கான அரசானை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.   நன்றி:- செல்வன்.யோகராஜ்,  செவிலியர். 9994683483  

பல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 15.6.2012

ஒரு வருட பல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு, தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட தகுதியுள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பம் "இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, 359 அண்ணா சாலை, சென்னை 6" என்ற முகவரிக்கு 15.6.2012 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

உயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை

உயிர் மருத்துவ கழிவு என்றால் என்ன ? மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கும் போது உருவாகும் கழிவுகளே உயிர் மருத்துவ கழிவுகள் எனப்படும் . எவ்வளவு அளவு உயிர் மருத்துவ கழிவுகள் உருவாகும் ? 10 - 20 %  உயிர் மருத்துவ கழிவுகள் மருத்துவமனைகளில் உருவாகிறது (1 கி / நோயாளி / நாள் என தோரயமாக கணக்கிடப்படுகிறது ) உயிர் மருத்துவ கழிவுகளை ஏன் பராமரிக்க வேண்டும் ?   உயிர் மருத்துவ கழிவுகளால் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு  காயமும் , தோற்று நோயும் ஏற்படலாம் எனவே உயிர் மருத்துவ கழிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும் . உயிர் மருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ? பணியாளர்கள் உயிர் மருத்துவ கழிவுகளை கையாளும் போது ஊசி மற்றும் கண்ணாடிகளை கைகளில் குத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் , இதனால் HIV கிருமி 0 .1 % மும் HEPATITIS B 30 % மும் HEPATITIS C 1 .8 % மும் பரவ வாய்ப்பு உள்ளது . பல நாட்களாக சேகரம் ஆகி இருக்கும் உயிர் மருத்துவ கழிவுகளால் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும்  தொற்று நோய் ஏற்படலாம். உயிர் மருத்துவ கழிவுகளை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும் ? உயிர் மருத்து

உலக செவிலியர்கள் தினம்: வைகோ வாழ்த்து

சென்னை, மே.11:  நாளை உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலர் வைகோ செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:  நவீன தாதியியல் முறையை உருவாக்கி முதலில் செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12-ஆம் நாளை 1965 -ஆம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டது.  இங்கிலாந்தில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியர்க்கு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றிய போது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும் தன் குடும்ப பெயரான நைட்டிங்கேல்யையும் இணைத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று பெயர் வைத்து அழைத்தனர்.  இறைவனால் தனக்குப் பணிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் புளோரன்ஸ் நைட்டிங்கேல். 1854-56 ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அர

உலக செவிலியர் தினம் 2012

உலகம் முழுவதும் செவிலியர் தினம் மே மாதம் 12 கொண்டாடப்படுகிறது , புலோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது அனைவருக்கும் செவிலியர் தினவாழ்த்துக்கள் இந்த வருடம் உலக செவிலியர் குழுமம் (International Nurses Council) தனது இணையதளத்தில் செவிலியர்கள் தின அட்டை படம் மற்றும் உபகரணங்களை வெளியிட்டு உள்ளது இந்த வருடத்திய தாரக வாசகமாக " Closing The Gap: From Evidence to Action "   என்பதை கூறியுள்ளது இந்த செவிலியர் தினத்தில் வெற்றிகள் பல அடைந்து, இலக்குகள் அனைத்தும் எட்டி நமது  சேவை பணி மேலும் சிறக்க TNNurse.org இன் வாழ்த்துக்கள் Tags: Internationala Nurses Day, Tamilnadu Nurses celebrating International Nurses day, Tamilnadu Nurses Communication Port, Tamilnadu Nurses Website,