தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கணினி (Computer), இருசக்கர வாகனம் (Two wheeler) மற்றும் நான்கு சக்கர வாகனம் (Car) வாங்குவதற்காக வழங்கப்படும் முன்பண நடைமுறைகளில் தமிழ்நாடு அரசு புதிய தளர்வுகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  
அரசாணை எண்: 223  
துறை: நிதித் துறை  
நாள்: 15.10.2026

முக்கிய மாற்றங்கள்:
பணிக்காலத் தகுதி தளர்வு:
முன்பு இத்தகைய முன்பணங்களைப் பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது இத்தகுதி தளர்த்தப்பட்டு, தகுதிகாண் பருவம் (Probationary Period) முடித்த அரசு ஊழியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒப்பளிப்பு அதிகாரம் (Sanctioning Authority):
முன்பு துறைத் தலைவருக்கு இருந்த அதிகாரம் மாற்றப்பட்டு, ஊழியர் பணிபுரியும் அலுவலகத்தின் தலைமை அலுவலர் அல்லது பணிப்பதிவேடு (Service Register) பராமரிக்கப்படும் அலுவலக தலைமை அலுவலரே ஒப்புதல் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை:
கைமுறையாக (Manually) விண்ணப்பிக்கும் முறைக்கு மாற்றாக, இனி IFHRMS இணையதளம் மற்றும் களஞ்சியம் (Kalanjiyam) செயலி வழியாக எளிமையாக விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பப் படிவங்கள்:
வாகன முன்பணங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட புதிய படிவம் எண்.12 மற்றும் கணினி முன்பணத்திற்கு இணைப்பு-1 படிவம் வெளியிடப்பட்டுள்ளது.  

இப்புதிய நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.