சர்வதேச மகளிர் தினம்: சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 08 ஆம் தேதி) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது, உழைக்கும் பெண்களின் உரிமைகளை காக்கவும், ஓட்டுரிமை கேட்டும், உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கேட்டும் --- நடத்தப்பட்ட ஒரு போராட்டமே இன்று சர்வதேச அளவில் மகளிர் தினமாக கொண்டாட வழி வகுத்தது என்றால் அது மிகை ஆகாது International Women,s Day Logo: பெண்களின் உரிமைகள்: பெண்களின் நிலை கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கி இருந்து வந்தது, ஆண் பெண் ஏற்ற இறக்கம், ஆணுக்கு பெண் சமம் இல்லா நிலை நீடித்து, பெண்களை அடிமையாகவும், வீட்டிற்குள்ளும் பூட்டி வைத்து இருந்தனர் இந்த நிலை பெண்களின் குரலினை உயர்த்தி அவர்களின் உரிமைகளை கேட்க வைத்தது முதல் போராட்டம்: 1908 ஆம் ஆண்டு 15000 மகளிர் “குறைந்த வேலை நேரம், தகுந்த ஊதியம், ஓட்டுரிமை” கேட்டு நியூயார்க் நகரினை முற்றுகை இட்டு போராட்டம் செய்தனர், இது அனைத்து பெண்ணினத்தையும் எழுச்சியுறச் செய்தது முதல் மகளிர் தின கோரிக்கை: 1910 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில் பெண்களுக்கான ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது, அதன் விளைவா